Friday, November 11, 2016




வைணவ ஆலயங்களில் ஸ்ரீ மஹா விஷ்ணு நின்ற, இருந்த மற்றும் கிடந்த எனும் ஏதாவது ஒரு கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 24 ஸ்தங்களில் சயனத் திருக்கோலத்தில் பெருமாள் அவ்வாறு காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. 
பொதுவாக அனைத்து சயனத் திருக்கோலங்களிலும் பெருமாள் தன்னை வணங்கும் பக்தர்களின் இடப்புறம் தலை வைத்து வலப்புறம் திருப்பாதங்களை நீட்டியிருப்பார் . 
ஆனால் பக்தர்களின் வலப்புறம் சிரசை வைத்து , இடப்புறம் திருப்பாதங்களை நீட்டி சயனித்திருக்கும் கோலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தல்ப கிரி   ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயத்தில் உள்ளது. இங்கு ஆதிசேஷனே பகவானுக்கு தல்பமாக ( கட்டில் ) ஒரு சிறிய குன்று உருவத்தில் இருப்பதால் இத்தலம் தல்ப கிரி என்று அழைக்கப்படுகிறது.
வைகுண்டத்திலிருந்து ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீ தேவி . பூ தேவியோடு பூமிக்கு வர விரும்பிய பொது ஆதிசேஷன் அவருக்கு முன்பாக இப்பகுதிக்கு வந்து ஒரு சிறிய குன்றாக பகவானுக்கு கட்டிலாக   ( தல்பமாக ) தன்னை மாற்றிக்கொண்டார் என்கிறது ஸ்தலப்புராணம் .

இவ்வாலயம் தல்பகிரி இரயில் நிலையத்திலிருந்து நடை பயண தூரத்திலேயே உள்ளது.. இக்கோயிலை உத்தர ஸ்ரீரங்கம்      என்று மக்கள் அழைக்கின்றனர். 
இக்கோவிலில் வைத்துத்தான் மஹாபாரதம் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்க ப்பட்டதாம்..



    

No comments:

Post a Comment