Tuesday, November 22, 2016



ஏழு என்ற எண்ணுக்கும்
 ஹிந்து மதத்திற்கும் 
நெருங்கிய தொடர்பு உண்டு. 
ஏழு லோகங்கள் , ஏழு சமுத்திரங்கள்,  
கங்கை, யமுனை,சரஸ்வதி ,கோதாவரி நர்மதை,சிந்து,காவேரி 
போன்ற ஏழு நதிகள்.
திருவேங்கடவன் கோயில் கொண்டுள்ள 
ஸப்த கிரி 
எனப்படும் ஏழுமலை 
(கருடாத்ரி,வ்ருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி ,நீலாத்ரி,
சேஷாத்ரி, வேங்கடாத்ரி 
மற்றும் நாராயணாத்ரி) 
மற்றும் 
ஸப்தமாதர்கள் ,ஸப்தரிஷிகள் ,
 ஸப்தபதி , சூரியனின் 
ஏழு குதிரைகள்,ஸப்தஸ்வரங்கள் ,
 என்று அடுக்கிக்கொண்டே 
போகலாம்.
சுமார் 6 லக்ஷம் சதுர மீட்டர்  பரப்பளவும்,
நான்கு கிலோமீட்டர் சுற்றளவும்
 கொண்டுள்ள ஸ்ரீரங்கத்திற்கு 
கீர்த்தி மிகுந்த ஏழு 
என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு மிகவும் பெருமைக்குரியது. 
கோவிலில் ஏழு பிஹாரங்கள் உள்ளன. இந்தியாவில் 
ஏழு பிரஹாரங்களைக்கொண்ட 
ஒரே கோவில் 
என்ற பெருமையை 
ஸ்ரீரங்கம் பெற்றுள்ளது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதப்பெருமாளுக்கு
 ஸ்ரீதேவி, பூதேவி,துலுக்க நாச்சியார் , சேரகுலவல்லித்தாயார்,
கமலவல்லித்தாயார் கோதை நாச்சியார்,
ஸ்ரீ ரங்கநாச்சியார் 
என ஏழு தேவியர்கள் உள்ளனர்.
இந்த ஆலயத்தில் உற்சவரான 
நம்பெருமாள் 
1.விருப்பம் திருநாள், 2.வசந்த உற்சவம், 
3.விஜய தசமி ,4. வேடுபரி 
5.பூபதி திருநாள்,6.பரிவேட்டை  
மற்றும் 
7.ஆதி பிரம்மோற்சவம்  
ஆகிய ஏழு திருநாளிலும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி 
சேவை சாதிக்கிறார்.
ஓர் ஆண்டில் 322 நாட்களுக்கு 
உற்சவங்கள் கொண்டாடப்படும்.
ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு 
ஏழு திருவிழாக்கள். 
அவை
 1. சித்திரை, 2.வைகாசி, 3ஆடி, 
4. புரட்டாசி, 5. தை , 6. மாசி, & 7. பங்குனி 
ஆகிய மாத திருவிழாவில் 
உற்சவப் பெருமாள் 
ஸ்ரீரங்கத்தை விட்டு
 வெளியே 
எழுந்தருளுகிறார். 
மேலும் ஒவ்வொரு உற்சவத்திலும் 
ஏழாவது நாளில் ஏழு முறை
 நம்பெருமாள் நெல் அளவு 
கண்டருளுகிறார்.
தமிழ் மாதங்களில் ஏழாவதான 
ஐப்பசி மாதத்தில் மட்டும் 
30 நாட்களும் தங்க குடத்தில் திருமஞ்சனத்திற்காக 
புனித காவிரி நீர் யானையின் 
மீது எடுத்து வரப்படுகிறது. 
பிற மாதங்களில் 
கொள்ளிடத்திலிருந்து 
புனித நீர் கொண்டு வரப்படுகிறது.
தசாவதாரம் எனும்
 பத்து அவதாரங்களில் 
ஏழாவது அவதாரமான
 ஸ்ரீராமாவதாரத்தின் போது 
ஸ்ரீ ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமைகொண்டவர்.
இந்த ஆலயத்தில் 
பன்னிரண்டு ஆழ்வார்களும்
 ஏழு சந்நிதிகளில் 
எழுந்தருளி இருக்கிறார்கள் 
தெற்கு திசை நோக்கி 
சேவை சாதிக்கும் 
பெரிய பெருமாள் 
திருமுகம் காண்பிக்கும் 
தென் திசையில்
 1.நாழிகேட்டான் கோபுரம், 2.ஆர்யபடால்கோபுரம்,
3.கார்த்திகை கோபுரம்,
 4. ரெங்காரெங்கா கோபுரம், 
5. முதலாவது தெற்கு 
கட்டை கோபுரம், 
6.இரண்டாவது தெற்கு 
கட்டை கோபுரம், & 
7. ராஜ கோபுரம்
 என்று ஏழு கோபுரங்கள் 
வானோங்கி நிற்கின்றன.
இங்கு நடைபெறும் உற்சவங்களில் ஏழு சந்தர்ப்பங்களில்மட்டும் கீழ் காணும் 
அறிய சேவைகளை 
ஆண்டில் ஒருமுறை  
மட்டுமே பக்தர்கள் 
கண்டு மகிழலாம்.
 1. பூசாட்டல் சேவை , 
2. கைசிக ஏகாதசியன்று இரவு பக்தர்கள் பச்சைக்கற்பூர
 படியேற்ற சேவை, 
3. மோஹினி அலங்கார  ரத்னாங்கி சேவை,
 4. வெள்ளி கருடன்
 5. உறையூர், 
ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீ ராமநவமி சேர்த்தி உற்சவம், 
6. தாயார் திருவடி சேவை, & 
7. தீபாவளி  அன்று மாலை  
நம் பெருமாளுக்கு   செய்யப்படும் ஜாலி அலங்காரம் என்று 
எண் ஏழுக்கும் , 
திருவரங்கத்திற்கும் 
எழிலான தொடர்புகள் 
                                  போற்றுதற்குரியது.                                    


No comments:

Post a Comment