108 திவ்ய தேசத்திலும் பெருமாள் நின்ற வண்ணம், அமர்ந்த வண்ணம் மற்றும் கிடந்த வண்ணத்திலும் காண அருள் புரிகிறார்.ஒரு கூடுதல் சிறப்பு. திருமலை கோவிந்தன் ஸ்ரீ வெங்கடாஜலபதி என்றும் பாலாஜி என்றும் அழைக்கப்பெறுவார்
மூலவர் கோவிந்தனின் முகவாய்க்கட்டையில் வெள்ளை நிறம் இருக்கும். என்ன காரணம்? ஏன் இவருக்கு மட்டும் இப்படி? இதன் மூல காரணத்தினை அறியலாமா?
திருமலையில் அனந்தாழ்வான் என்ற பக்தனுக்கு தோட்ட வேலையில் உதவி புரிய சின்னப்பையனாகச் சென்றார் பெருமாள் . பெருமாளுக்குத் தான் மட்டுமே பூக்கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்திருந்தார்
அனந்தாழ்வார் . தோட்ட வேலைகளில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை மட்டும் உதவ அனுமதித்தார். பாவம் அந்த கர்ப்பிணி பெண் படும் சிரமத்தை, அவஸ்த்தையை கண்டு மனம் பதைத்துப்போனார் பெருமாள். அப்பெண்மணிக்கு உதவிட ஒரு சிறுவனாக மாறி அங்கு சென்று தோட்ட வேலைகளில் ஈடுபடலானார் .
தன் சபதத்திற்கு அச்சிறுவன் இடையூறு செய்வதாக கருதி உதவிக்கு வந்த அச்சிறுவனை விரட்டி அடித்தார் அனந்தாழ்வார். இரும்பு கடப்பாரையை அச்சிறுவன் மீது தூக்கி அடித்தார். சிறுவனும் மறைந்தான்.
அதே நேரத்தில் திருமலை சன்னதியில் குடி கொண்டிருந்த ஸ்ரீ பெருமாளின் திருமுகத்தில் உள்ள முகவாய்க்கட்டையில் இரத்தம் பீரிடுகிறது. பட்டர் சுவாமி பெருமாளின் பீதாம்பரத்தால் துடைத்தார் . இரத்தம் வெளிவருவது கொஞ்சமும் குறையவில்லை. தனது அங்கவஸ்த்திரத்தால் துடைத்தார்.ஆனால் இரத்தம் வெளி வருவது மட்டும் குறையவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பட்டர் சுவாமி , பெருமாளுக்கு திருநாமம் இட அங்கே வைத்திருந்த வெள்ளை நிற பச்சைக் கற்பூரத்தை எடுத்து இரத்தம் வரும் இடத்தில் அணைத்தால் போல் வைத்தார்.
என்ன ஆச்சர்யம் ! இரத்தம் கொட்டுவது முற்றிலும் நின்று விட்டது. இவ்வாறாக வெள்ளை நிறத்தில் இருந்த அந்தப் பச்சைக் கற்பூரம் அங்கேயே திருக்கோலம் கொண்டு விட்டது. அவருக்கு அது ஒரு நிரந்தர அடையாளத்தைக் கொடுத்து விட்டது.
இன்றும், அனந்தாழ்வார் விட்டெறிந்த அந்தக் கடப்பாரையை திருமலைக் கோயிலின் பிரதான நுழைவாயிலில் காணலாம். " தெய்வம் மனுஷ்ய ரூபேண" என்பார்கள். பகவான் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வந்து பக்தர்கள் துயர் துடைக்க முற்படலாம். அதனால் யாரையும் கடிந்து பேசி மனதையோ அல்லது உடலையோ காயப்படுத்த வேண்டாம் என்பதே இவ்வரலாறு கூறும் உண்மையாகும்
அனந்தாழ்வார் விட்டெறிந்த கடப்பாரை
|
No comments:
Post a Comment