நவம்பர் மாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை மிக
விமரிசையாக 13-11-2016 அன்று மாலை நடைபெற்றது. திரளாக வந்திருந்த பக்த பெருமக்களிடையே செயலாளர் ஸ்ரீ கல்யாண வரத்தான் ஆத்ம ஞானம் பெறக்கூடிய விஷயங்களை கூறினார்.
ஒரு சிறு கதையொன்றையும் எடுத்துக்காட்டாக கூறினார். முன்னொரு காலத்தில் பேராசை பிடித்த ஒரு மனிதன் இருந்தான்.ஒரு நாள் கடவுள் ஸ்ரீ மஹாவிஷ்ணு பிரசன்னமானார். "உனக்கு யாது வேண்டுமோ கேள் அதை அருள்வதற்கு நான் காத்திருக்கிறேன்" என்கிறார் கடவுள்.
உடனே அந்த மனிதன் "நான் நடந்து போகும் இடமெல்லாம், அதாவது என் கால்கள் படும் இடமெல்லாம் என் சொந்தமாக வேண்டும்" என்றான்
கடவுளும் "அப்படியே ஆகட்டும். நீ முன்னால் செல் பின்னால் நான் வருகிறேன்" என்றார் . அந்த மனிதனும் சிறிது தூரம் நடந்து சென்று பின்னால் திரும்பிப் பார்த்தான். தரையில் நான்கு பாதங்கள் பதிந்து இருப்பதை க்கண்டான் . கவலை கொள்ளாமல் இன்னும் சற்றுத்தூரம் போய் பின்னால் திருப்ப்பார்த்தான். அப்போதும் நான்கு பாத சுவடுகளைக் கண்டான் .
மேலும் சற்று நடந்து போய் பின்னால் திருமம்பிப் பார்த்தபோது இரண்டு பாத சுவடுகளை மட்டும் கண்டான்.
உடனே அவன் கடவுள் என்னை ஏமாற்றி விட்டார் என்று எண்ணி மேற்கொண்டு நடக்காமல் அங்கேயே அமர்ந்து விட்டான்.
கடவுள் மீண்டும் அவன் முன்னே தோன்றி " ஏன் நடக்க வில்லை " என்றார் . " கடவுளே நீ என் பின்னால் வருவதாகக் கூறினாய் .கூறியபிரகாரம் வரவில்லை. நீ என்னை கை விட்டு விட்டாய் ." என்றான்
" நான் உன்னை கைவிட்டேன் என்று எவ்வாறு கண்டுகொண்டாய் " " முன்பு இரு முறை நான் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தேன் நான்கு பாத சுவடுகள் தெரிந்தன. ஆனால் இப்போது இரண்டு பாத சுவடுகள் மட்டுமே தெரிகின்றன. அப்படியென்றால் நீ கூறியிருந்த பிரகாரம் என் பின்னால் வரவில்லை தானே "
கடவுளுக்கு மிக்க ஆச்சர்யம் . அவர் சொன்னார் " பக்தனே நீ நடந்து நடந்து சோர்ந்து போய் தடுமாறி விழப்போனாய் மேற்கொண்டு உன்னால் நடக்க முடியாது என்று கருதி உன்னை என் தோள்களில் சுமந்து வந்தேன் . நீ பார்த்தது என் இரு பாத சுவடுகளை மட்டும்தான். இப்போது உன்னை மேலும் தூக்கிக்கொண்டு நடக்கவா ?"
" பகவானே என்னை மன்னித்தருள வேண்டும். இத்தனை நாட்களாய் நான் அறிவீலியாக இருந்து விட்டேன். உன்னை நம்பியவர்களை எந்நாளும் நீங்கள் கை விட மாட்டீர்கள் என்று கண்டுகொண்டேன். எனக்கு எதுவுமே வேண்டாம் உங்கள் அருள் இருந்தால் மட்டும் போதும்" என்று பகவான் பாதங்களில் வீழ்ந்தான் .
அதைப்போல நாம் நம்மை அவனிடத்தில் ஒப்படைத்து விட்டால் நம் எல்லா பொறுப்புகளையும் அவன் ஏற்றுக்கொண்டு நம்மை காப்பான் என்று கதையை கூறிமுடித்தார் செயலாளர் ஸ்ரீ கல்யாணவரதன். கடவுள் முன் நின்று கண்களை திறந்து அவனைப் பார்த்து உங்களுக்கு என்னே குறை என்று மட்டும் கூறுங்கள். அதை தீர்த்து வைக்கும் வழிவகைகளை அவன் அறிவான் .உங்களை பூரணமாக பகவானிடம் ஒப்படையுங்கள் என்றார் கேட்டவர் கண்கள் பனித்தன .
நாமும் நம்மை ஸ்ரீ சத்யநாராயணனிடம் ஒப்படைப்போம். நம்மை அவன் வழி நடத்துவான்.
பூஜை நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்களை இப்போது காணலாம்.
திரு அஸ்முக் எனும் ஓர் வட இந்தியர் நம் சத்யநாராயண சேவா சமிதியின் அக்டோபர் 2012 நோட்டிஸை பார்த்துவிட்டு மாதா மாதம் பூஜைக்கு வேண்டிய நவதானியம் மற்றும் நவகிரஹ வஸ்த்திரம் ஆகியவற்றை அளித்து வருகிறார். மிகவும் சாந்த ஸ்வரூபியான இவர் வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பார்களே அதைப்போல 5 வருடங்களாக அளித்து வருகிறார் . அது மட்டுமல்ல ஸ்ரீ சங்கராலயத்தில் நடைபெறும் குரு பெயர்ச்சி ஹோமம் , கணபதி ஹோமம் போன்ற எல்லா ஹோமங்களும் நெய் மற்றும்
சமித்து அளித்து நம் சேவா சமிதியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக உள்ள திரு அஸ்முக் அவர்கள் நம் சமிதியின் தலைவர் திரு.ஸ்ரீராமனால் சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். வாழ்க அவர் தொண்டுள்ளம் .
திரு கோவிந்தராஜன் ( ஜி.ஆர்) அவர்கள் கல்யாண மண்டபம் பாடியில் வைத்துள்ளார் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்.நம் ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதியின் பூஜை களில் மிகவும் அக்கறை எடுத்து வருகிறார்.ஒவ்வொரு ஞாயிறு மாதமும் காலை நடைபெறும் சூர்ய நமஸ்கார பூஜையில் கலந்து கொள்வார் .இரண்டாம் ஞாயிறு மாலை நடைபெறும் நம் பூஜையில் தவறாமல் கலந்து கொண்டு புஷ்பம் மற்றும் மாலைகள் வாங்க மாதா மாதம் ரூபாய் 2000/- நன்கொடையாக அளித்து வருகிறார்.அவருக்கு நம் பாராட்டுக்கள்.
சேவா சமிதியின் செயல்பாடுகளுக்கும் வளர்ச்சிக்கும் பொருள் உதவி மற்றும் தானிய உதவிகள் வரவேற்கப்படுகின்றன .அன்பளிக்க வேண்டுவோர் செயலாளர் திரு கல்யாணவரதன் அவர்களை 94444 52687 எனும் செல் பேசியில் தொடர்பு கொள்ளலாம் .
No comments:
Post a Comment