ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ மஹாலக்ஷ்மி ,ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பில் உறைபவள் .எந்த ஜீவனும் சுக சாந்தியோடு உயிர்வாழ வேண்டுமெனில் ஸ்ரீ லக்ஷ்மியின் அருட்பார்வை தேவை.எனவே அவளுக்கு "ஸ்ரீ" என்றும் லக்ஷ்மி என்றும் பெயர்கள் உள்ளன." ஸ்ரீ" என்றால் அனைவராலும் ஆச்ரயிக்கப்படுவது."லட்சுமி " என்றால் அனைவருக்கும் இலட்சிய ஸ்தானம் போன்றது என பொருள். இவ்வுலகில் உள்ள பொருட்களைனைத்தும் லக்ஷ்மியின் வடிவங்களே. அணுவிலிருந்து ,பரப்ரம்மா வரை உள்ள அனைத்திலும் வடிவமாக ஆதிலக்ஷ்மி திகழ்கிறாள்.
திருமலையப்பனுக்கு பிரம்மா தான் சுயமாக முன்னின்று உத்சவத்தை நடத்தினாலும் அது சுவாமிக்கு மட்டுமின்றி ,சுவாமியின் திருமார்பில் வாசம் செய்யும் .நாச்சியாருக்கும் சேரும்.தாயார் கார்த்திகை மாதம் அவதரித்ததின் காரணமாக திருமலையப்பனுக்கு நடைபெறுவது போன்று ஒன்பது நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். தாய் செல்வத்தாய் , திருமாமகள். ஸ்வாமிக்கு கருடனைப்போன்று தாயாருக்கு யானை வாகனம் முதன்மையானது.
படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் பணியினை பகவானே செய்தாலும் ஆதிசக்தியான ஸ்ரீ ஆதிலக்ஷ்மி உதவியுடன் இவை அனைத்தும் நடக்கிறது.
செல்வம் மட்டும் மஹாலக்ஷ்மியன்று " தனமக்னி " "தனம் வாயு" " தனம் சூர்யோ " " தனம் வசு " .. என்று ஸ்ரீ ஸூக்தம் , அக்நி , வாயு, சூரியன் ,இந்திரன் முதலானவர்களும் செல்வத்தின் வடிவங்களே என போற்றப்படுகிறது. பத்மாவதி தாயார் தாமரை மலரில் அவதரித்திருப்பது என்பது பௌதிக காரணம் . அத்தாமரை யோக சாஸ்த்திரத்தில் " சஹஸ்ரார பத்மம் " அவற்றிலிருந்து அவதரித்த சக்தியே " ஞான லக்ஷ்மி ". ஞானம் இல்லாத சம்பாத்தியம், சாம்பலில் ஊற்றிய பன்னிராகும்
பஞ்சபூதங்கள் தன வசமே உள்ளன என சொல்வது பஞ்சமி எண்ணின் சிறப்பு. அந்த பஞ்சமி நாளன்று ஸ்வாமியிடமிருந்து சீதனமாக மங்கலப்பொருள்கள்
திருச்சானுருக்கு வந்து சேருகின்றன, மங்கள தேவதைக்கு ஸ்வாமி அனுப்பும் மங்கள பொருள்கள் பக்த கோடிகளுக்கு மஹா பிரசாதமாகி சர்வமங்களுக்கும் காரணமாகிறது.எனவே இத்தாயார் பிரமோற்ஸவம் உலக நாயகியான ஸ்ரீ அதிலக்ஷ்மிக்கு நடப்பது எனவே பக்தர்கள் திருச்சானுர் பிரமோற்ஸவத்தில் கலந்து கொண்டு மங்கள தாயாரின் அருள் செல்வம் மற்றும் பொருள் செல்வத்திற்கு பாத்திரதாரர்கள் ஆக பிரார்த்திக்கிறோம்.
No comments:
Post a Comment