Sunday, October 30, 2016


அன்புடையீர் வணக்கம்.
ஒவ்வொரு வருஷமும் தீபாவளி திருநாளில் வீட்டிலே முடங்கிக் கிடந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி நேரத்தைக் கழிப்பதை விடுத்து, பெரம்பூர் ஸ்ரீ சங்கராலயத்தை சேர்ந்த  சில சமூக ஆர்வலர்கள்,  மஹா பெரியவாள் ஆக்ஞைக்  கேற்ப  பெரம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்வதை கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த தீபாவளி திருநாளில் காலையிலேயே சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி 
 மூன்று குழுக்களாக பிரிந்து கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனை , ஐயனாவரம் ஆதரவற்றோர் இல்லம் மற்றும்  ESI மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தலையில் நல்லெண்ணெய் தங்கள் கைகளினாலேயே வைத்து , கையில் எடுத்து சென்ற கங்கா ஜலத்தை புரோக்ஷணம் செய்து உண்மையான கங்கா ஸ்நானம் செய்வித்தனர். பிறகு மங்கள சின்னங்களான குங்குமம் விபூதியை அணிவித்தனர் 

சென்னை KK நகரைசேர்ந்த ஒரு தம்பதியர் ( பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை ) சுமார் 1500 பாதுஷா , பிஸ்கெட்டுகள் , ஆகியவைகளை தமது மேற்பார்வையில்  சமையற்காரர்களைக் கொண்டு தயார் செய்து கொண்டு வந்திருந்தனர் . 

அப்பெருமகனாருக்கு  வயது 80க்கு மேல்  .இருப்பினும் தொண்டின் ஆர்வம் குறையாமல் மஹா பெரியவாளின் வேண்டுகோளினை நிறைவேற்றுவதில் ஒரு தீவிரம் கொண்டிருந்தனர் அத் தம்பதியர்.

அங்கிருந்தவர்களுக்கு சுவீட் , பிஸ்கெட்டுகள் வழங்கி "  ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர , " என்று முழங்க சொல்லி அவர்களை மகிழ்வித்தனர்.

மன நோய் மருத்துவ மனையில்  ஒரு சிலரின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்ததாம்.மதுவுக்கு அடிமையானவர்களும்    சிகிச்சை பெற்று வருகிறார்கள் . நன்கு தெளிந்தவர்கள்  தம் குடியினால் வாழ்க்கை சீர்கேடு அடைந்ததை விவரிக்கும்போது கண்களில் கண்ணீர் கசிந்தது .
"  ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர  " என்று முழங்கி ஓய்ந்தவுடன் ஒரு மன நோயாளி ஸ்ரீ குருவாயூரப்பனை குறித்த ஒரு பாடலைப் பாடியபோது அனைவரும் உணர்ச்சி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் பணிபுரிவோருக்கும் இனிப்புகள் , பிஸ்கெட்டுகள் வழங்கி அவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தனர் . 
இவ்விதமாக இந்த தீபாவளி திருநாளினை பயனுறும் வகையில் ஆதரவற்றோருக்கும் , சமுதாயத்தினால் புறம் தள்ளப்பட்டோருக்கும் சேவை செய்து திருப்தி அடைந்தது போற்றுதற்குரியது. இது போன்ற சேவையினை வர இருக்கும் பண்டிகை நாட்களில் இன்னும் பலரை இந்த மகோன்னத சேவையில் ஈடுபடுத்தி மக்கள் சேவையே மகேசன் சேவை.
வாழ்க  மனிதநேயம் !     வளர்க்க  அரிய சேவைகள்!! 

It is better to lit a candle than to curse the Darkness


No comments:

Post a Comment