Friday, November 25, 2016

பக்த கோடிகளுக்கு ,
நமஸ்காரம்.
27-11-2016 ஞாயிற்றுக்கிழமை, காலை 0900 மணிமுதல் 1200 மணிவரை 
பெரம்பூர் மீனாக்ஷி தெருவில் இருக்கும் 
ஸ்ரீ சங்கராலயத்தில் 
ஸ்ரீ கணபதி ஹோமம் ,
ஸ்ரீ புருஷ சுக்த ஹோமம்    
  மற்றும் 
ஸ்ரீ சுக்த ஹோமம் 
ஆகிய ஹோமங்கள் சிறப்பாக நடைபெற உள்ளன .
அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு 
ஆன்மிக அருள் 
பெற அன்புடன் அழைக்கிறோம் 
அன்பர்களிடமிருந்து நன்கொடைகள்
 பணமாகவோ அல்லது
 ஹோமத்திற்கு தேவைப்படும்
 பொருள்களான 
நெய் ,பழங்கள் , பூ ,பூமாலைகள் ,
தேங்காய் ,வெற்றிலை ,பாக்கு,
வாழைப்பழம் .சர்க்கரை
போன்றவற்றை 
நன்கொடையாக அளித்து 
ஹோமத்தில் பாக்கியதாரர்கள் 
ஆகும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
 மற்ற விபரங்களுக்கு
செயலாளரை 
அல்லது நிர்வாகிகளை 
அணுகவும்.

       நமஸ்காரம்.

இங்கனம் 
ஸ்ரீ ராம் ,
தலைவர் 
கல்யாணவரதன் ,
செயலாளர்,
94444 52687
இராஜாராமன் ,
பொருளாளர் 




Tuesday, November 22, 2016



ஏழு என்ற எண்ணுக்கும்
 ஹிந்து மதத்திற்கும் 
நெருங்கிய தொடர்பு உண்டு. 
ஏழு லோகங்கள் , ஏழு சமுத்திரங்கள்,  
கங்கை, யமுனை,சரஸ்வதி ,கோதாவரி நர்மதை,சிந்து,காவேரி 
போன்ற ஏழு நதிகள்.
திருவேங்கடவன் கோயில் கொண்டுள்ள 
ஸப்த கிரி 
எனப்படும் ஏழுமலை 
(கருடாத்ரி,வ்ருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி ,நீலாத்ரி,
சேஷாத்ரி, வேங்கடாத்ரி 
மற்றும் நாராயணாத்ரி) 
மற்றும் 
ஸப்தமாதர்கள் ,ஸப்தரிஷிகள் ,
 ஸப்தபதி , சூரியனின் 
ஏழு குதிரைகள்,ஸப்தஸ்வரங்கள் ,
 என்று அடுக்கிக்கொண்டே 
போகலாம்.
சுமார் 6 லக்ஷம் சதுர மீட்டர்  பரப்பளவும்,
நான்கு கிலோமீட்டர் சுற்றளவும்
 கொண்டுள்ள ஸ்ரீரங்கத்திற்கு 
கீர்த்தி மிகுந்த ஏழு 
என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு மிகவும் பெருமைக்குரியது. 
கோவிலில் ஏழு பிஹாரங்கள் உள்ளன. இந்தியாவில் 
ஏழு பிரஹாரங்களைக்கொண்ட 
ஒரே கோவில் 
என்ற பெருமையை 
ஸ்ரீரங்கம் பெற்றுள்ளது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதப்பெருமாளுக்கு
 ஸ்ரீதேவி, பூதேவி,துலுக்க நாச்சியார் , சேரகுலவல்லித்தாயார்,
கமலவல்லித்தாயார் கோதை நாச்சியார்,
ஸ்ரீ ரங்கநாச்சியார் 
என ஏழு தேவியர்கள் உள்ளனர்.
இந்த ஆலயத்தில் உற்சவரான 
நம்பெருமாள் 
1.விருப்பம் திருநாள், 2.வசந்த உற்சவம், 
3.விஜய தசமி ,4. வேடுபரி 
5.பூபதி திருநாள்,6.பரிவேட்டை  
மற்றும் 
7.ஆதி பிரம்மோற்சவம்  
ஆகிய ஏழு திருநாளிலும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி 
சேவை சாதிக்கிறார்.
ஓர் ஆண்டில் 322 நாட்களுக்கு 
உற்சவங்கள் கொண்டாடப்படும்.
ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு 
ஏழு திருவிழாக்கள். 
அவை
 1. சித்திரை, 2.வைகாசி, 3ஆடி, 
4. புரட்டாசி, 5. தை , 6. மாசி, & 7. பங்குனி 
ஆகிய மாத திருவிழாவில் 
உற்சவப் பெருமாள் 
ஸ்ரீரங்கத்தை விட்டு
 வெளியே 
எழுந்தருளுகிறார். 
மேலும் ஒவ்வொரு உற்சவத்திலும் 
ஏழாவது நாளில் ஏழு முறை
 நம்பெருமாள் நெல் அளவு 
கண்டருளுகிறார்.
தமிழ் மாதங்களில் ஏழாவதான 
ஐப்பசி மாதத்தில் மட்டும் 
30 நாட்களும் தங்க குடத்தில் திருமஞ்சனத்திற்காக 
புனித காவிரி நீர் யானையின் 
மீது எடுத்து வரப்படுகிறது. 
பிற மாதங்களில் 
கொள்ளிடத்திலிருந்து 
புனித நீர் கொண்டு வரப்படுகிறது.
தசாவதாரம் எனும்
 பத்து அவதாரங்களில் 
ஏழாவது அவதாரமான
 ஸ்ரீராமாவதாரத்தின் போது 
ஸ்ரீ ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமைகொண்டவர்.
இந்த ஆலயத்தில் 
பன்னிரண்டு ஆழ்வார்களும்
 ஏழு சந்நிதிகளில் 
எழுந்தருளி இருக்கிறார்கள் 
தெற்கு திசை நோக்கி 
சேவை சாதிக்கும் 
பெரிய பெருமாள் 
திருமுகம் காண்பிக்கும் 
தென் திசையில்
 1.நாழிகேட்டான் கோபுரம், 2.ஆர்யபடால்கோபுரம்,
3.கார்த்திகை கோபுரம்,
 4. ரெங்காரெங்கா கோபுரம், 
5. முதலாவது தெற்கு 
கட்டை கோபுரம், 
6.இரண்டாவது தெற்கு 
கட்டை கோபுரம், & 
7. ராஜ கோபுரம்
 என்று ஏழு கோபுரங்கள் 
வானோங்கி நிற்கின்றன.
இங்கு நடைபெறும் உற்சவங்களில் ஏழு சந்தர்ப்பங்களில்மட்டும் கீழ் காணும் 
அறிய சேவைகளை 
ஆண்டில் ஒருமுறை  
மட்டுமே பக்தர்கள் 
கண்டு மகிழலாம்.
 1. பூசாட்டல் சேவை , 
2. கைசிக ஏகாதசியன்று இரவு பக்தர்கள் பச்சைக்கற்பூர
 படியேற்ற சேவை, 
3. மோஹினி அலங்கார  ரத்னாங்கி சேவை,
 4. வெள்ளி கருடன்
 5. உறையூர், 
ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீ ராமநவமி சேர்த்தி உற்சவம், 
6. தாயார் திருவடி சேவை, & 
7. தீபாவளி  அன்று மாலை  
நம் பெருமாளுக்கு   செய்யப்படும் ஜாலி அலங்காரம் என்று 
எண் ஏழுக்கும் , 
திருவரங்கத்திற்கும் 
எழிலான தொடர்புகள் 
                                  போற்றுதற்குரியது.                                    


Saturday, November 19, 2016



108 திவ்ய தேசத்திலும் பெருமாள் நின்ற வண்ணம், அமர்ந்த வண்ணம் மற்றும் கிடந்த வண்ணத்திலும் காண அருள் புரிகிறார்.ஒரு கூடுதல் சிறப்பு.  திருமலை கோவிந்தன்   ஸ்ரீ வெங்கடாஜலபதி என்றும் பாலாஜி என்றும்  அழைக்கப்பெறுவார் 
மூலவர் கோவிந்தனின் முகவாய்க்கட்டையில் வெள்ளை நிறம்   இருக்கும். என்ன காரணம்? ஏன் இவருக்கு மட்டும் இப்படி? இதன் மூல காரணத்தினை அறியலாமா?

திருமலையில் அனந்தாழ்வான் என்ற பக்தனுக்கு தோட்ட வேலையில் உதவி புரிய சின்னப்பையனாகச் சென்றார் பெருமாள் . பெருமாளுக்குத் தான் மட்டுமே பூக்கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்திருந்தார் 
அனந்தாழ்வார் . தோட்ட  வேலைகளில்  தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை மட்டும் உதவ அனுமதித்தார். பாவம் அந்த கர்ப்பிணி பெண் படும் சிரமத்தை, அவஸ்த்தையை கண்டு மனம் பதைத்துப்போனார் பெருமாள். அப்பெண்மணிக்கு உதவிட ஒரு சிறுவனாக மாறி அங்கு சென்று தோட்ட வேலைகளில் ஈடுபடலானார் .

தன் சபதத்திற்கு அச்சிறுவன்  இடையூறு செய்வதாக கருதி உதவிக்கு வந்த அச்சிறுவனை விரட்டி அடித்தார் அனந்தாழ்வார். இரும்பு கடப்பாரையை அச்சிறுவன் மீது தூக்கி அடித்தார். சிறுவனும் மறைந்தான்.

தே நேரத்தில் திருமலை சன்னதியில் குடி கொண்டிருந்த ஸ்ரீ பெருமாளின் திருமுகத்தில் உள்ள முகவாய்க்கட்டையில் இரத்தம் பீரிடுகிறது. பட்டர் சுவாமி பெருமாளின் பீதாம்பரத்தால் துடைத்தார் . இரத்தம் வெளிவருவது கொஞ்சமும் குறையவில்லை. தனது அங்கவஸ்த்திரத்தால் துடைத்தார்.ஆனால் இரத்தம் வெளி வருவது மட்டும் குறையவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பட்டர் சுவாமி , பெருமாளுக்கு திருநாமம் இட அங்கே வைத்திருந்த வெள்ளை நிற பச்சைக் கற்பூரத்தை எடுத்து இரத்தம் வரும் இடத்தில் அணைத்தால் போல் வைத்தார்.

என்ன ஆச்சர்யம் ! இரத்தம் கொட்டுவது முற்றிலும் நின்று விட்டது. இவ்வாறாக  வெள்ளை நிறத்தில் இருந்த அந்தப் பச்சைக் கற்பூரம் அங்கேயே திருக்கோலம் கொண்டு விட்டது. அவருக்கு அது ஒரு நிரந்தர அடையாளத்தைக் கொடுத்து விட்டது.

இன்றும், அனந்தாழ்வார் விட்டெறிந்த அந்தக் கடப்பாரையை திருமலைக் கோயிலின் பிரதான நுழைவாயிலில் காணலாம். " தெய்வம் மனுஷ்ய ரூபேண" என்பார்கள். பகவான் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வந்து பக்தர்கள் துயர் துடைக்க முற்படலாம். அதனால் யாரையும் கடிந்து பேசி மனதையோ அல்லது உடலையோ காயப்படுத்த வேண்டாம் என்பதே இவ்வரலாறு கூறும் உண்மையாகும்
                                                             அனந்தாழ்வார் விட்டெறிந்த கடப்பாரை

               
 










   










Friday, November 18, 2016



அன்புடையீர் ,
நமஸ்காரம்.
2016 நவம்பர் மாதம்  20ஆம் தேதி
 ஞாயிற்றுக்கிழமை , 
பெரம்பூர் மீனாக்ஷி தெருவில் உள்ள 

    " ஸ்ரீ சங்கர ஹாலில் " 
காலை 0900 மணிக்கு
               

                         
வெகு விமரிசையாக நடைபெறும்.
 அனைவரும்  கலந்து கொண்டு பகவத் அருள் பெறுமாறு 
அன்புடன் 
அழைக்கிறோம். 


அன்பர்களிடமிருந்து நன்கொடைகள்
 பணமாகவோ அல்லது
 ஹோமத்திற்கு தேவைப்படும்
 பொருள்களான 
நெய் ,பழங்கள் , பூ ,பூமாலைகள் ,
தேங்காய் ,வெற்றிலை ,பாக்கு, 
வாழைப்பழம் .சர்க்கரை 
போன்றவற்றை 
நன்கொடையாக அளித்து 
ஹோமத்தில் பாக்கியதாரர்கள் 
ஆகும்படி 
கேட்டுக்கொள்கிறோம்.
 மற்ற விபரங்களுக்கு 
செயலாளரை 
அல்லது நிர்வாகிகளை 
அணுகவும்.

       நமஸ்காரம்.
இங்கனம் 
ஸ்ரீ ராம் ,
தலைவர் 
கல்யாணவரதன் ,
செயலாளர்,
94444 52687
இராஜாராமன் ,
பொருளாளர் 






ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ மஹாலக்ஷ்மி ,ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பில் உறைபவள் .எந்த ஜீவனும் சுக சாந்தியோடு உயிர்வாழ வேண்டுமெனில் ஸ்ரீ லக்ஷ்மியின் அருட்பார்வை தேவை.எனவே அவளுக்கு "ஸ்ரீ" என்றும் லக்ஷ்மி என்றும் பெயர்கள் உள்ளன." ஸ்ரீ" என்றால் அனைவராலும் ஆச்ரயிக்கப்படுவது."லட்சுமி " என்றால் அனைவருக்கும் இலட்சிய ஸ்தானம் போன்றது என பொருள். இவ்வுலகில் உள்ள பொருட்களைனைத்தும் லக்ஷ்மியின் வடிவங்களே. அணுவிலிருந்து ,பரப்ரம்மா வரை உள்ள அனைத்திலும்  வடிவமாக ஆதிலக்ஷ்மி திகழ்கிறாள்.
திருமலையப்பனுக்கு பிரம்மா தான் சுயமாக முன்னின்று உத்சவத்தை நடத்தினாலும் அது சுவாமிக்கு மட்டுமின்றி ,சுவாமியின் திருமார்பில் வாசம் செய்யும் .நாச்சியாருக்கும் சேரும்.தாயார் கார்த்திகை மாதம் அவதரித்ததின் காரணமாக திருமலையப்பனுக்கு நடைபெறுவது போன்று ஒன்பது நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். தாய் செல்வத்தாய் , திருமாமகள். ஸ்வாமிக்கு கருடனைப்போன்று தாயாருக்கு யானை வாகனம் முதன்மையானது.
படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் பணியினை பகவானே செய்தாலும் ஆதிசக்தியான ஸ்ரீ ஆதிலக்ஷ்மி உதவியுடன் இவை அனைத்தும் நடக்கிறது.
செல்வம் மட்டும் மஹாலக்ஷ்மியன்று " தனமக்னி "   "தனம்  வாயு"   " தனம் சூர்யோ "  " தனம் வசு " .. என்று ஸ்ரீ ஸூக்தம் , அக்நி , வாயு, சூரியன் ,இந்திரன் முதலானவர்களும் செல்வத்தின் வடிவங்களே என போற்றப்படுகிறது. பத்மாவதி தாயார் தாமரை மலரில் அவதரித்திருப்பது என்பது பௌதிக காரணம் . அத்தாமரை யோக சாஸ்த்திரத்தில் " சஹஸ்ரார பத்மம் " அவற்றிலிருந்து அவதரித்த சக்தியே " ஞான லக்ஷ்மி ". ஞானம் இல்லாத சம்பாத்தியம்,  சாம்பலில் ஊற்றிய பன்னிராகும் 

பஞ்பூதங்கள் தன வசமே உள்ளன என சொல்வது பஞ்மி எண்ணின் சிறப்பு. அந்த பஞ்சமி நாளன்று ஸ்வாமியிடமிருந்து சீதனமாக மங்கலப்பொருள்கள் 
திருச்சானுருக்கு  வந்து சேருகின்றன, மங்கள தேவதைக்கு ஸ்வாமி அனுப்பும் மங்கள பொருள்கள் பக்த கோடிகளுக்கு மஹா பிரசாதமாகி சர்வமங்களுக்கும் காரணமாகிறது.எனவே இத்தாயார் பிரமோற்ஸவம் உலக நாயகியான ஸ்ரீ அதிலக்ஷ்மிக்கு நடப்பது  எனவே பக்தர்கள் திருச்சானுர் பிரமோற்ஸவத்தில் கலந்து கொண்டு மங்கள தாயாரின் அருள் செல்வம் மற்றும் பொருள் செல்வத்திற்கு பாத்திரதாரர்கள் ஆக பிரார்த்திக்கிறோம்.


Monday, November 14, 2016


நவம்பர் மாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை மிக 
விமரிசையாக 13-11-2016 அன்று மாலை நடைபெற்றது. திரளாக வந்திருந்த பக்த பெருமக்களிடையே செயலாளர் ஸ்ரீ கல்யாண வரத்தான் ஆத்ம ஞானம் பெறக்கூடிய விஷயங்களை கூறினார்.
ஒரு சிறு கதையொன்றையும் எடுத்துக்காட்டாக கூறினார். முன்னொரு காலத்தில் பேராசை பிடித்த ஒரு மனிதன் இருந்தான்.ஒரு நாள் கடவுள் ஸ்ரீ மஹாவிஷ்ணு பிரசன்னமானார். "உனக்கு யாது வேண்டுமோ கேள் அதை அருள்வதற்கு நான் காத்திருக்கிறேன்" என்கிறார் கடவுள். 
உடனே அந்த மனிதன் "நான் நடந்து போகும் இடமெல்லாம், அதாவது என் கால்கள் படும் இடமெல்லாம் என் சொந்தமாக வேண்டும்" என்றான் 
கடவுளும் "அப்படியே ஆகட்டும். நீ முன்னால் செல் பின்னால் நான் வருகிறேன்" என்றார் . அந்த மனிதனும் சிறிது தூரம் நடந்து சென்று பின்னால் திரும்பிப் பார்த்தான். தரையில் நான்கு பாதங்கள் பதிந்து இருப்பதை க்கண்டான் . கவலை கொள்ளாமல் இன்னும் சற்றுத்தூரம் போய் பின்னால் திருப்ப்பார்த்தான். அப்போதும் நான்கு பாத சுவடுகளைக் கண்டான் .
மேலும் சற்று நடந்து போய் பின்னால் திருமம்பிப் பார்த்தபோது இரண்டு பாத சுவடுகளை மட்டும் கண்டான்.
உடனே அவன் கடவுள் என்னை ஏமாற்றி விட்டார் என்று எண்ணி மேற்கொண்டு நடக்காமல் அங்கேயே அமர்ந்து விட்டான்.
கடவுள் மீண்டும் அவன் முன்னே தோன்றி " ஏன்  நடக்க வில்லை " என்றார் . " கடவுளே நீ என் பின்னால் வருவதாகக் கூறினாய் .கூறியபிரகாரம் வரவில்லை. நீ என்னை கை விட்டு விட்டாய் ." என்றான் 
" நான் உன்னை கைவிட்டேன் என்று எவ்வாறு கண்டுகொண்டாய் "  " முன்பு இரு முறை நான் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தேன் நான்கு பாத சுவடுகள் தெரிந்தன. ஆனால் இப்போது இரண்டு பாத சுவடுகள் மட்டுமே தெரிகின்றன. அப்படியென்றால் நீ கூறியிருந்த பிரகாரம் என் பின்னால் வரவில்லை தானே "
கடவுளுக்கு மிக்க ஆச்சர்யம் . அவர் சொன்னார் " பக்தனே  நீ நடந்து நடந்து சோர்ந்து போய் தடுமாறி விழப்போனாய் மேற்கொண்டு உன்னால் நடக்க முடியாது என்று கருதி உன்னை என் தோள்களில் சுமந்து வந்தேன் . நீ பார்த்தது என் இரு பாத சுவடுகளை மட்டும்தான். இப்போது உன்னை மேலும் தூக்கிக்கொண்டு நடக்கவா ?"
" பகவானே என்னை மன்னித்தருள வேண்டும். இத்தனை நாட்களாய் நான் அறிவீலியாக இருந்து விட்டேன். உன்னை நம்பியவர்களை எந்நாளும் நீங்கள் கை விட மாட்டீர்கள் என்று கண்டுகொண்டேன். எனக்கு எதுவுமே வேண்டாம் உங்கள் அருள் இருந்தால் மட்டும் போதும்" என்று பகவான் பாதங்களில் வீழ்ந்தான் .
அதைப்போல நாம் நம்மை அவனிடத்தில் ஒப்படைத்து விட்டால் நம் எல்லா பொறுப்புகளையும் அவன் ஏற்றுக்கொண்டு நம்மை காப்பான் என்று கதையை கூறிமுடித்தார் செயலாளர் ஸ்ரீ கல்யாணவரதன். கடவுள் முன் நின்று கண்களை திறந்து அவனைப் பார்த்து உங்களுக்கு என்னே குறை என்று மட்டும் கூறுங்கள். அதை தீர்த்து வைக்கும் வழிவகைகளை அவன் அறிவான் .உங்களை பூரணமாக பகவானிடம் ஒப்படையுங்கள் என்றார்  கேட்டவர் கண்கள் பனித்தன .
நாமும் நம்மை ஸ்ரீ சத்யநாராயணனிடம் ஒப்படைப்போம். நம்மை அவன் வழி நடத்துவான்.
பூஜை நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்களை இப்போது காணலாம்.



திரு அஸ்முக் எனும் ஓர் வட இந்தியர் நம் சத்யநாராயண சேவா சமிதியின் அக்டோபர்  2012 நோட்டிஸை பார்த்துவிட்டு மாதா மாதம் பூஜைக்கு வேண்டிய நவதானியம் மற்றும் நவகிரஹ வஸ்த்திரம் ஆகியவற்றை அளித்து வருகிறார். மிகவும் சாந்த ஸ்வரூபியான இவர் வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பார்களே அதைப்போல 5 வருடங்களாக அளித்து வருகிறார் . அது மட்டுமல்ல ஸ்ரீ சங்கராலயத்தில் நடைபெறும் குரு பெயர்ச்சி ஹோமம் , கணபதி ஹோமம் போன்ற எல்லா ஹோமங்களும் நெய் மற்றும் 

சமித்து அளித்து நம் சேவா சமிதியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக உள்ள திரு அஸ்முக் அவர்கள் நம் சமிதியின் தலைவர் திரு.ஸ்ரீராமனால் சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். வாழ்க அவர் தொண்டுள்ளம் .
திரு கோவிந்தராஜன் ( ஜி.ஆர்) அவர்கள் கல்யாண மண்டபம் பாடியில் வைத்துள்ளார் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்.நம் ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதியின் பூஜை களில் மிகவும் அக்கறை எடுத்து வருகிறார்.ஒவ்வொரு ஞாயிறு மாதமும் காலை நடைபெறும் சூர்ய நமஸ்கார பூஜையில் கலந்து கொள்வார் .இரண்டாம் ஞாயிறு மாலை நடைபெறும் நம் பூஜையில் தவறாமல் கலந்து கொண்டு புஷ்பம் மற்றும் மாலைகள் வாங்க மாதா மாதம் ரூபாய் 2000/- நன்கொடையாக அளித்து வருகிறார்.அவருக்கு நம் பாராட்டுக்கள்.
சேவா சமிதியின் செயல்பாடுகளுக்கும் வளர்ச்சிக்கும் பொருள் உதவி மற்றும் தானிய உதவிகள் வரவேற்கப்படுகின்றன .அன்பளிக்க வேண்டுவோர் செயலாளர் திரு கல்யாணவரதன் அவர்களை 94444 52687 எனும் செல் பேசியில் தொடர்பு கொள்ளலாம் .
  




























Friday, November 11, 2016



அன்புடையீர் 
நமஸ்காரம்/ ஆசிர்வாதம் 

 நவம்பர் மாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை  13-11-2016 ஞாயிறு மாலை 4-00 மணிக்கு பெரம்பூர் மீனாக்ஷி தெருவில் இருக்கும் ஸ்ரீ சங்கரா ஹாலில்  நடைபெறும்..

ஆறாவது ஆண்டில் காலடி வைக்கிறோம். இவ்வளவு நாட்களும் நல் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும்  சேவா சமிதியின் சார்பாக நன்றியினை காணிக்கையாக்குகிறோம். இனி வரும் காலங்களிலும் உங்கள் 
ஒத்துழைப்பினையும் ஆதரவையும் கோருகிறோம்.

அனைவரும் வருக !  ஸ்ரீ சத்யநாராயணா வின் பேரருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஸ்ரீநாத் 
தலைவர் 

கல்யாணவரதன் 
செயலாளர் 

ராஜாராமன் 
பொருளாளர் 
ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி 




வைணவ ஆலயங்களில் ஸ்ரீ மஹா விஷ்ணு நின்ற, இருந்த மற்றும் கிடந்த எனும் ஏதாவது ஒரு கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 24 ஸ்தங்களில் சயனத் திருக்கோலத்தில் பெருமாள் அவ்வாறு காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. 
பொதுவாக அனைத்து சயனத் திருக்கோலங்களிலும் பெருமாள் தன்னை வணங்கும் பக்தர்களின் இடப்புறம் தலை வைத்து வலப்புறம் திருப்பாதங்களை நீட்டியிருப்பார் . 
ஆனால் பக்தர்களின் வலப்புறம் சிரசை வைத்து , இடப்புறம் திருப்பாதங்களை நீட்டி சயனித்திருக்கும் கோலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தல்ப கிரி   ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயத்தில் உள்ளது. இங்கு ஆதிசேஷனே பகவானுக்கு தல்பமாக ( கட்டில் ) ஒரு சிறிய குன்று உருவத்தில் இருப்பதால் இத்தலம் தல்ப கிரி என்று அழைக்கப்படுகிறது.
வைகுண்டத்திலிருந்து ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீ தேவி . பூ தேவியோடு பூமிக்கு வர விரும்பிய பொது ஆதிசேஷன் அவருக்கு முன்பாக இப்பகுதிக்கு வந்து ஒரு சிறிய குன்றாக பகவானுக்கு கட்டிலாக   ( தல்பமாக ) தன்னை மாற்றிக்கொண்டார் என்கிறது ஸ்தலப்புராணம் .

இவ்வாலயம் தல்பகிரி இரயில் நிலையத்திலிருந்து நடை பயண தூரத்திலேயே உள்ளது.. இக்கோயிலை உத்தர ஸ்ரீரங்கம்      என்று மக்கள் அழைக்கின்றனர். 
இக்கோவிலில் வைத்துத்தான் மஹாபாரதம் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்க ப்பட்டதாம்..