அனைவருக்கும் நமஸ்காரம்.
மாதா மாதம் நடக்கும் ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் இடையிடையில் நம் கல்யாண வரதன் மாமா சிறு சிறு நிகழ்ச்சிகள் , சுலோகங்கள் ,கதைகள் சொல்வார்கள். அவைகளை சிறு சிறு என்று கூறிவிட்டேன் மன்னிக்கவும் அவைகள் வாழ்வின் பேருண்மைகளை விளக்கும் பெரும் தத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
நீங்கள் பகவானிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்களை மூடாமல் நன்றாக கண்களைத் திறந்து சுவாமியை கூர்ந்து கவனித்து உங்கள் குறைகளை கூறுங்கள். பணிவுடன் வேண்டுங்கள் . நீதான் கதி என்று உங்களையே அவனிடம் ஒப்படையுங்கள். இதையே " ஆத்ம சமர்ப்பணம் " என்கிறோம் . பகவான் இந்த ஆத்ம சமர்ப்பணத்தைத்தான் எதிர்பார்க்கிறார் . உங்கள் குறை தீர்க்கவே , உங்களுக்கு அருள் ஆசி புரியவே அவர் தயாராக இருக்கிறார். உலகளவு செல்வம் கொண்டவர் அவர். நீங்கள் வேண்டுவது ஒரு கடுகளவு செல்வம் மட்டுமே. அதை வழங்குவதில் அவருக்கு சிரமம் இருக்காது.
கீதையில் பகவான் ஸ்ரீ கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார் "
" In the 12th chapter of Bagavath Geetha under the caption Bakthi Yoga, Lord Krishna says to Arjuna not only to Arjuna but to all of us that Hey Arjuna you penetrate your mind to God. But it is not at all possible at the first outset. Arjuna you perform puja, your mind would be distracted. You freely allow your mind to wander and enjoy the worldly pleasure. But it is your duty Arjuna to bring back your maind and perform puja with concentration.One day or other slowly and slowly your mind will be attached with me firmly and permanently."
இதைப்போல ஒவ்வொரு பூஜையிலும் நாம் அள்ளிப்பருக அமுத வார்த்தைகள் அருவியாக கொட்டும்.
வாழ்க்கையில் நாம் ஏதாவது சிக்கல்களை சந்திக்க நேர்ந்தால் , அவைகளை சந்திக்க தேவையான மன உறுதியை , தெம்பினை நிச்சயம் அளிக்கும்.
இதைப்போல ஒவ்வொரு பூஜையிலும் நாம் அள்ளிப்பருக அமுத வார்த்தைகள் அருவியாக கொட்டும். அது வாழ்க்கையில் நாம் ஏதாவது சிக்கல்களை சந்திக்க நேர்ந்தால் , அவைகளை சந்திக்க தேவையான மன உறுதியை , தெம்பினை நிச்சயம் அளிக்கும்.
ஒரு முறைதான் பூஜையில் கலந்து கொள்ளுங்களேன் . உங்கள் வாழ்வில் மாற்றம் , திருப்பம் ஏற்றம் வருவதை உணருவீர்கள் இது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல பலரும் உணர்ந்த உண்மை அனுபவம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment