Sunday, December 11, 2016


பக்த கோடிகளுக்கு நமஸ்காரம் .
டிசம்பர் மாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை மிக சிறப்பாக 11-12-2016 ஞாயிறு மாலை 0400 மணிக்கு நடைபெற்றது. சுமார் 100 பக்தர்களுக்கு மேல்  கலந்து கொண்டு ஸ்ரீ சத்தியநாராயணனின் பேரருளுக்கு பாக்யதாரர் ஆனார்கள். 
இந்த மாதம் ஸ்ரீ கல்யாணவரதன் மாமா தம்முடைய பிரசங்கத்தில் கூட்டு பிரார்த்தனை குறித்து சிறப்பாக பேசினார். 
ஒரு தெருவுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டுமென்றால் அங்கு வசிப்பவர்கள் ஒன்றாகக் கூடி மனு அளித்தால் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதைப்போல , நாம் அனைவரும் ஒன்றாக உள்ளமுருக வேண்டிக்கொண்டால் நிச்சயம் ஸ்ரீ பகவான் அருள் புரிவான். நமக்கு வேண்டுவதை அருளவே அவன் காத்திருக்கிறான். அவன் வேண்டுவதெல்லாம் நம்முடைய உண்மையான பக்தியும் ஆத்ம சமர்ப்பணமும்தான் .

இன்று பூஜையில் கலந்துகொண்ட திரு சீனிவாசன் தான் ஸ்ரீ சத்தியநாராயணன் அருளால் மிகப்பெரிய கண்டத்திலிருந்து தப்பித்ததை மயிர் சிலிர்க்க எடுத்துரைத்தார்.
சுமார் 25 நாட்களுக்கு முன்னால் அவர் தன்னுடைய மோட்டார் பைக்கில் அவருக்கு சொந்தமான பாக்டரிக்கு பணியின் நிமித்தம் செல்கிறார். அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கு " புரோக்ஷணம்" செய்வதற்காக ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் வழங்கப்பட்ட தீர்த்தத்தை ஒரு பெட் பாட்டிலில் எடுத்துச்செல்கிறார். செல்லும் போது ஓரிடத்தில் காலமிது பைக் ஏறி கீழே விழுந்து விடுகிறார். தலையும் தரையில் பட்டுவிட்டது. ஆனால் தலை அடிபடாமல் ஏதோ ஒரு பொருள் தலையணை போல் அவரை காத்து நிற்கிறது. அது அவர் எடுத்து சென்ற ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் கொடுக்கப்பட்ட தீர்த்த பெட் பாட்டில் அவர் பையிலிருந்து  விழுந்து அவர் தலையடியில் தலையணை போல் காத்து நிற்கிறது. என்னே ஸ்ரீ பகவானின் பேரருள்! திரு சீனிவாசனின் போட்டோ இந்த பகுதியிலேயே உள்ளது.
ஆண்டவன் இன்றும் இருக்கின்றான்.
அவன் அன்பர்களை என்றும் காக்கின்றான்.
Prasadam Distribution

Mr & Mrs Srinivasan

Friday, December 9, 2016



அன்புடையீர் 
நமஸ்காரம்/ ஆசிர்வாதம் 

 டிசம்பர்  மாத 
ஸ்ரீ சத்யநாராயண பூஜை  
12-12-2016 ஞாயிறு மாலை 4-00 மணிக்கு 
பெரம்பூர் மீனாக்ஷி தெருவில் இருக்கும் 
ஸ்ரீ சங்கரா ஹாலில்
  நடைபெறும்..

அனைவரும் வருக !  
ஸ்ரீ சத்யநாராயணா வின் பேரருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

இவண் 
ஸ்ரீநாத் 
தலைவர் 

கல்யாணவரதன் 
செயலாளர் 

ராஜாராமன் 
பொருளாளர் 
ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி 





Tuesday, December 6, 2016


நாகப்பட்டினம் அருகில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான்."சரவண பவ" என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த  அவன் , அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான் . அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன் அச்சிலையின்  அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான்.இது போல இன்னொரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்
அந்த சிற்பி வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கை விரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான்.. அந்த ஊரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான் . அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து , முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது
மன்னன் அந்நேரத்தில் அங்கே வர அதை 'எட்டிப்பிடி' என உத்தரவுவிட்டான். காவலர்கள் அந்த மயிலைப்பிடித்து அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர்.அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் ' எட்டடிக்குடி'  என மாறி " எட்டுக்குடி" என்று அழைக்கப்படுகிறது
இதே சிற்பி மற்றொரு சிலையையும்  வடித்தான்.அதை என்கண் என்ற தளத்தில் வைத்தான்.சிற்பி 
முதலில்   வடித்த சிலை சிக்கலிலும் ,அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை . பிரகாரத்தில் முருகனுடன் பொறுக்குச்  சென்ற நவ வீரர்களின் சிலைகள் சிலைகள் உள்ளன .கூத்தாடும் கணபதி ,ஜுரதேவர் , சீனிவாச சவுந்தர்ராஜ பெருமாள் ,ஆஞ்சநேயர் அய்யப்பன் மஹாலட்சுமி நவகிரஹங்கள் , சனிபகவான் , பைரவர்   என பலர் உள்ளனர்.
எட்டுக்குடி சுப்ரமணிய ஸ்வாமியை குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும் , முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும் இவர் காட்சி தருவார்.சித்திரா பவுர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது.கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைப்பட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும்.சிறப்புடையது.
சவுந்தரநாயகர் , ஆனந்தவல்லி தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள்பாலிக்கின்றனர் .
இத்தலங்கள் நாகப்பட்டினம் அருகில் உள்ளன . பேருந்து வசதிகள் உண்டு
நாகப்பட்டினம் - என்கண் = 32 கி மீ .  நாகப்பட்டினம் - எட்டுக்குடி = 31 கி மீ . நாகப்பட்டினம் -  சிக்கில் =4 கிமி 
சிக்கல் (பொருள்வைத்தசேரிபொரவச்சேரி முருகன் கோயில்,
எட்டுக்குடி முருகன் கோயில்,
என்கண் முருகன் கோவில்,
இந்த மூன்று கோயிலையும் ஒரே நாளில்
 நாம் தரிசனம் செய்தால்...
நாம் நினைத்தது கண்டிப்பாக நடக்கும் 
என்பது ஐதீகம்...
ENKANN
Poravacheri Sri Murugan





Thursday, December 1, 2016



                           
                                                     

தொண்டர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக  ஸ்ரீ தேவி வைகுண்டத்தை விட்டு நேராக பூலோகத்தில் தங்கால் மலை என்று அழைக்கப்பட்ட திருத்தாங்கலுக்கு வ ந்து கடுந்தவம் இயற்றினாள் .தேவியின் தவத்தை மெச்சும் பொருட்டு பெருமாள் அவள் முன் தோன்றி நற்சான்தழ் வழங்கினார். திருமகள் தங்கி தவம் புரிந்த தலம் ஆதலால் இப்பகுதி திருத்தங்கல் என்ற பெயர் உண்டானது.
இவ்வாலயத்தில் முதலில் காட்சி தரும் பெருமாள் பக்தர்களின் நிறை ,குறைகளை நிறுத்து அருள் பாலிப்பவன் என்பதை சங்கேதமாக உணர்த்துகிறது.
நயனங்களால் நன்மை கொழிக்க வைக்கும் தாயார் அருண கமல மஹாலக்ஷ்மியாக அதாவது செங்கமலத் தயாராக அற்புத தரிசனம் அருள்கிறாள்.
பெருமாளுக்கு திருத்தங்காலப்பன் என்று அழகு தமிழ் பெயர். திருமணம் , பிள்ளைப்பேறு என்று தம் குறைகளை தாயாரிடம் சமர்ப்பித்து விட்டு அவை நிறைவேறியதும் அதன் நன்றி காணிக்கையாக தாயாருக்கு ஒன்பது கஜ புடவை சாத்தி நெகிழ்கிறார்கள் பக்தர்கள்.
மூலக்கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் அழகாக காட்சி தருகிறார். அவருடன் வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாக ஸ்ரீதேவி , பூதேவி ,நீளா தேவியுடன் , ஜாம்பவதியையும் இங்கே தரிசிக்கலாம். 
ராமாவதாரத்தில் சீதை மீட்ப்புக்காக தனக்கு உதவியவர்களில் ஒருவனான ஜாம்பவானுக்கு நற்பேறு வழங்க விரும்பிய பெருமாள்  தன் கிருஷ்ணாவதாரத்தில் அவன் மகள் ஜாம்பவதியை மணம் புரிந்து கொண்டார். அந்த ஜாம்பவதியை இங்கே காணலாம். 
இவர்களுடன் பிருகு மகரிஷி,மார்க்கண்டேயர்,அருணன் ,கருடன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளார்கள். கோயிலின் மேல் தளத்தில் கருடன் வித்தியாச கோலம் காட்டுகிறார். நான்கு கரங்களுடன் , அமிர்த கலசம் தங்கியிருக்கிறார். சர்ப்பத்தை மாலையாக அணிந்து இருக்கிறார்.
உற்சவர் திருத்தங்கால் அப்பன் என்றழைக்கப்படுகிறார். ஆடிப்பூர விசேஷ நாளன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையையும், உடுத்தி க்களைந்த புடவையையும் எடுத்து வந்து இங்கே பெருமாளுக்கு சாத்தி மகிழ்கிறார்கள்.
தென்காசி - விருதுநகர் இரயில் மார்க்கத்தில் திருத்தண்கால் இரயில் நிலையத்திற்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது.
ஆலயம் சென்று வருவோம்.   பெருமாளை,தாயாரை சேவித்து வருவோம். 
நற்பேறு பெற்றிடுவோம். 


















Friday, November 25, 2016

பக்த கோடிகளுக்கு ,
நமஸ்காரம்.
27-11-2016 ஞாயிற்றுக்கிழமை, காலை 0900 மணிமுதல் 1200 மணிவரை 
பெரம்பூர் மீனாக்ஷி தெருவில் இருக்கும் 
ஸ்ரீ சங்கராலயத்தில் 
ஸ்ரீ கணபதி ஹோமம் ,
ஸ்ரீ புருஷ சுக்த ஹோமம்    
  மற்றும் 
ஸ்ரீ சுக்த ஹோமம் 
ஆகிய ஹோமங்கள் சிறப்பாக நடைபெற உள்ளன .
அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு 
ஆன்மிக அருள் 
பெற அன்புடன் அழைக்கிறோம் 
அன்பர்களிடமிருந்து நன்கொடைகள்
 பணமாகவோ அல்லது
 ஹோமத்திற்கு தேவைப்படும்
 பொருள்களான 
நெய் ,பழங்கள் , பூ ,பூமாலைகள் ,
தேங்காய் ,வெற்றிலை ,பாக்கு,
வாழைப்பழம் .சர்க்கரை
போன்றவற்றை 
நன்கொடையாக அளித்து 
ஹோமத்தில் பாக்கியதாரர்கள் 
ஆகும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
 மற்ற விபரங்களுக்கு
செயலாளரை 
அல்லது நிர்வாகிகளை 
அணுகவும்.

       நமஸ்காரம்.

இங்கனம் 
ஸ்ரீ ராம் ,
தலைவர் 
கல்யாணவரதன் ,
செயலாளர்,
94444 52687
இராஜாராமன் ,
பொருளாளர் 




Tuesday, November 22, 2016



ஏழு என்ற எண்ணுக்கும்
 ஹிந்து மதத்திற்கும் 
நெருங்கிய தொடர்பு உண்டு. 
ஏழு லோகங்கள் , ஏழு சமுத்திரங்கள்,  
கங்கை, யமுனை,சரஸ்வதி ,கோதாவரி நர்மதை,சிந்து,காவேரி 
போன்ற ஏழு நதிகள்.
திருவேங்கடவன் கோயில் கொண்டுள்ள 
ஸப்த கிரி 
எனப்படும் ஏழுமலை 
(கருடாத்ரி,வ்ருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி ,நீலாத்ரி,
சேஷாத்ரி, வேங்கடாத்ரி 
மற்றும் நாராயணாத்ரி) 
மற்றும் 
ஸப்தமாதர்கள் ,ஸப்தரிஷிகள் ,
 ஸப்தபதி , சூரியனின் 
ஏழு குதிரைகள்,ஸப்தஸ்வரங்கள் ,
 என்று அடுக்கிக்கொண்டே 
போகலாம்.
சுமார் 6 லக்ஷம் சதுர மீட்டர்  பரப்பளவும்,
நான்கு கிலோமீட்டர் சுற்றளவும்
 கொண்டுள்ள ஸ்ரீரங்கத்திற்கு 
கீர்த்தி மிகுந்த ஏழு 
என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு மிகவும் பெருமைக்குரியது. 
கோவிலில் ஏழு பிஹாரங்கள் உள்ளன. இந்தியாவில் 
ஏழு பிரஹாரங்களைக்கொண்ட 
ஒரே கோவில் 
என்ற பெருமையை 
ஸ்ரீரங்கம் பெற்றுள்ளது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதப்பெருமாளுக்கு
 ஸ்ரீதேவி, பூதேவி,துலுக்க நாச்சியார் , சேரகுலவல்லித்தாயார்,
கமலவல்லித்தாயார் கோதை நாச்சியார்,
ஸ்ரீ ரங்கநாச்சியார் 
என ஏழு தேவியர்கள் உள்ளனர்.
இந்த ஆலயத்தில் உற்சவரான 
நம்பெருமாள் 
1.விருப்பம் திருநாள், 2.வசந்த உற்சவம், 
3.விஜய தசமி ,4. வேடுபரி 
5.பூபதி திருநாள்,6.பரிவேட்டை  
மற்றும் 
7.ஆதி பிரம்மோற்சவம்  
ஆகிய ஏழு திருநாளிலும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி 
சேவை சாதிக்கிறார்.
ஓர் ஆண்டில் 322 நாட்களுக்கு 
உற்சவங்கள் கொண்டாடப்படும்.
ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு 
ஏழு திருவிழாக்கள். 
அவை
 1. சித்திரை, 2.வைகாசி, 3ஆடி, 
4. புரட்டாசி, 5. தை , 6. மாசி, & 7. பங்குனி 
ஆகிய மாத திருவிழாவில் 
உற்சவப் பெருமாள் 
ஸ்ரீரங்கத்தை விட்டு
 வெளியே 
எழுந்தருளுகிறார். 
மேலும் ஒவ்வொரு உற்சவத்திலும் 
ஏழாவது நாளில் ஏழு முறை
 நம்பெருமாள் நெல் அளவு 
கண்டருளுகிறார்.
தமிழ் மாதங்களில் ஏழாவதான 
ஐப்பசி மாதத்தில் மட்டும் 
30 நாட்களும் தங்க குடத்தில் திருமஞ்சனத்திற்காக 
புனித காவிரி நீர் யானையின் 
மீது எடுத்து வரப்படுகிறது. 
பிற மாதங்களில் 
கொள்ளிடத்திலிருந்து 
புனித நீர் கொண்டு வரப்படுகிறது.
தசாவதாரம் எனும்
 பத்து அவதாரங்களில் 
ஏழாவது அவதாரமான
 ஸ்ரீராமாவதாரத்தின் போது 
ஸ்ரீ ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமைகொண்டவர்.
இந்த ஆலயத்தில் 
பன்னிரண்டு ஆழ்வார்களும்
 ஏழு சந்நிதிகளில் 
எழுந்தருளி இருக்கிறார்கள் 
தெற்கு திசை நோக்கி 
சேவை சாதிக்கும் 
பெரிய பெருமாள் 
திருமுகம் காண்பிக்கும் 
தென் திசையில்
 1.நாழிகேட்டான் கோபுரம், 2.ஆர்யபடால்கோபுரம்,
3.கார்த்திகை கோபுரம்,
 4. ரெங்காரெங்கா கோபுரம், 
5. முதலாவது தெற்கு 
கட்டை கோபுரம், 
6.இரண்டாவது தெற்கு 
கட்டை கோபுரம், & 
7. ராஜ கோபுரம்
 என்று ஏழு கோபுரங்கள் 
வானோங்கி நிற்கின்றன.
இங்கு நடைபெறும் உற்சவங்களில் ஏழு சந்தர்ப்பங்களில்மட்டும் கீழ் காணும் 
அறிய சேவைகளை 
ஆண்டில் ஒருமுறை  
மட்டுமே பக்தர்கள் 
கண்டு மகிழலாம்.
 1. பூசாட்டல் சேவை , 
2. கைசிக ஏகாதசியன்று இரவு பக்தர்கள் பச்சைக்கற்பூர
 படியேற்ற சேவை, 
3. மோஹினி அலங்கார  ரத்னாங்கி சேவை,
 4. வெள்ளி கருடன்
 5. உறையூர், 
ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீ ராமநவமி சேர்த்தி உற்சவம், 
6. தாயார் திருவடி சேவை, & 
7. தீபாவளி  அன்று மாலை  
நம் பெருமாளுக்கு   செய்யப்படும் ஜாலி அலங்காரம் என்று 
எண் ஏழுக்கும் , 
திருவரங்கத்திற்கும் 
எழிலான தொடர்புகள் 
                                  போற்றுதற்குரியது.                                    


Saturday, November 19, 2016



108 திவ்ய தேசத்திலும் பெருமாள் நின்ற வண்ணம், அமர்ந்த வண்ணம் மற்றும் கிடந்த வண்ணத்திலும் காண அருள் புரிகிறார்.ஒரு கூடுதல் சிறப்பு.  திருமலை கோவிந்தன்   ஸ்ரீ வெங்கடாஜலபதி என்றும் பாலாஜி என்றும்  அழைக்கப்பெறுவார் 
மூலவர் கோவிந்தனின் முகவாய்க்கட்டையில் வெள்ளை நிறம்   இருக்கும். என்ன காரணம்? ஏன் இவருக்கு மட்டும் இப்படி? இதன் மூல காரணத்தினை அறியலாமா?

திருமலையில் அனந்தாழ்வான் என்ற பக்தனுக்கு தோட்ட வேலையில் உதவி புரிய சின்னப்பையனாகச் சென்றார் பெருமாள் . பெருமாளுக்குத் தான் மட்டுமே பூக்கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்திருந்தார் 
அனந்தாழ்வார் . தோட்ட  வேலைகளில்  தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை மட்டும் உதவ அனுமதித்தார். பாவம் அந்த கர்ப்பிணி பெண் படும் சிரமத்தை, அவஸ்த்தையை கண்டு மனம் பதைத்துப்போனார் பெருமாள். அப்பெண்மணிக்கு உதவிட ஒரு சிறுவனாக மாறி அங்கு சென்று தோட்ட வேலைகளில் ஈடுபடலானார் .

தன் சபதத்திற்கு அச்சிறுவன்  இடையூறு செய்வதாக கருதி உதவிக்கு வந்த அச்சிறுவனை விரட்டி அடித்தார் அனந்தாழ்வார். இரும்பு கடப்பாரையை அச்சிறுவன் மீது தூக்கி அடித்தார். சிறுவனும் மறைந்தான்.

தே நேரத்தில் திருமலை சன்னதியில் குடி கொண்டிருந்த ஸ்ரீ பெருமாளின் திருமுகத்தில் உள்ள முகவாய்க்கட்டையில் இரத்தம் பீரிடுகிறது. பட்டர் சுவாமி பெருமாளின் பீதாம்பரத்தால் துடைத்தார் . இரத்தம் வெளிவருவது கொஞ்சமும் குறையவில்லை. தனது அங்கவஸ்த்திரத்தால் துடைத்தார்.ஆனால் இரத்தம் வெளி வருவது மட்டும் குறையவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பட்டர் சுவாமி , பெருமாளுக்கு திருநாமம் இட அங்கே வைத்திருந்த வெள்ளை நிற பச்சைக் கற்பூரத்தை எடுத்து இரத்தம் வரும் இடத்தில் அணைத்தால் போல் வைத்தார்.

என்ன ஆச்சர்யம் ! இரத்தம் கொட்டுவது முற்றிலும் நின்று விட்டது. இவ்வாறாக  வெள்ளை நிறத்தில் இருந்த அந்தப் பச்சைக் கற்பூரம் அங்கேயே திருக்கோலம் கொண்டு விட்டது. அவருக்கு அது ஒரு நிரந்தர அடையாளத்தைக் கொடுத்து விட்டது.

இன்றும், அனந்தாழ்வார் விட்டெறிந்த அந்தக் கடப்பாரையை திருமலைக் கோயிலின் பிரதான நுழைவாயிலில் காணலாம். " தெய்வம் மனுஷ்ய ரூபேண" என்பார்கள். பகவான் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வந்து பக்தர்கள் துயர் துடைக்க முற்படலாம். அதனால் யாரையும் கடிந்து பேசி மனதையோ அல்லது உடலையோ காயப்படுத்த வேண்டாம் என்பதே இவ்வரலாறு கூறும் உண்மையாகும்
                                                             அனந்தாழ்வார் விட்டெறிந்த கடப்பாரை