நாகப்பட்டினம் அருகில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான்."சரவண பவ" என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த அவன் , அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான் . அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன் அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான்.இது போல இன்னொரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான் .
அந்த சிற்பி வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கை விரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான்.. அந்த ஊரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான் . அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து , முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது.
மன்னன் அந்நேரத்தில் அங்கே வர அதை 'எட்டிப்பிடி' என உத்தரவுவிட்டான். காவலர்கள் அந்த மயிலைப்பிடித்து அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர்.அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் ' எட்டடிக்குடி' என மாறி " எட்டுக்குடி" என்று அழைக்கப்படுகிறது.
இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான்.அதை என்கண் என்ற தளத்தில் வைத்தான்.சிற்பி
முதலில் வடித்த சிலை சிக்கலிலும் ,அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை . பிரகாரத்தில் முருகனுடன் பொறுக்குச் சென்ற நவ வீரர்களின் சிலைகள் சிலைகள் உள்ளன .கூத்தாடும் கணபதி ,ஜுரதேவர் , சீனிவாச சவுந்தர்ராஜ பெருமாள் ,ஆஞ்சநேயர் அய்யப்பன் மஹாலட்சுமி நவகிரஹங்கள் , சனிபகவான் , பைரவர் என பலர் உள்ளனர்.
எட்டுக்குடி சுப்ரமணிய ஸ்வாமியை குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும் , முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும் இவர் காட்சி தருவார்.சித்திரா பவுர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது.கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைப்பட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும்.சிறப்புடையது.
சவுந்தரநாயகர் , ஆனந்தவல்லி தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள்பாலிக்கின்றனர் .
இத்தலங்கள் நாகப்பட்டினம் அருகில் உள்ளன . பேருந்து வசதிகள் உண்டு.
நாகப்பட்டினம் - என்கண் = 32 கி மீ . நாகப்பட்டினம் - எட்டுக்குடி = 31 கி மீ . நாகப்பட்டினம் - சிக்கில் =4 கிமி
சிக்கல் (பொருள்வைத்தசேரி) பொரவச்சேரி முருகன் கோயில்,
எட்டுக்குடி முருகன் கோயில்,
என்கண் முருகன் கோவில்,
இந்த மூன்று கோயிலையும் ஒரே நாளில்
நாம் தரிசனம் செய்தால்...
நாம் நினைத்தது கண்டிப்பாக நடக்கும்
என்பது ஐதீகம்...
ENKANN |
Poravacheri Sri Murugan |
No comments:
Post a Comment