Thursday, December 1, 2016



                           
                                                     

தொண்டர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக  ஸ்ரீ தேவி வைகுண்டத்தை விட்டு நேராக பூலோகத்தில் தங்கால் மலை என்று அழைக்கப்பட்ட திருத்தாங்கலுக்கு வ ந்து கடுந்தவம் இயற்றினாள் .தேவியின் தவத்தை மெச்சும் பொருட்டு பெருமாள் அவள் முன் தோன்றி நற்சான்தழ் வழங்கினார். திருமகள் தங்கி தவம் புரிந்த தலம் ஆதலால் இப்பகுதி திருத்தங்கல் என்ற பெயர் உண்டானது.
இவ்வாலயத்தில் முதலில் காட்சி தரும் பெருமாள் பக்தர்களின் நிறை ,குறைகளை நிறுத்து அருள் பாலிப்பவன் என்பதை சங்கேதமாக உணர்த்துகிறது.
நயனங்களால் நன்மை கொழிக்க வைக்கும் தாயார் அருண கமல மஹாலக்ஷ்மியாக அதாவது செங்கமலத் தயாராக அற்புத தரிசனம் அருள்கிறாள்.
பெருமாளுக்கு திருத்தங்காலப்பன் என்று அழகு தமிழ் பெயர். திருமணம் , பிள்ளைப்பேறு என்று தம் குறைகளை தாயாரிடம் சமர்ப்பித்து விட்டு அவை நிறைவேறியதும் அதன் நன்றி காணிக்கையாக தாயாருக்கு ஒன்பது கஜ புடவை சாத்தி நெகிழ்கிறார்கள் பக்தர்கள்.
மூலக்கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் அழகாக காட்சி தருகிறார். அவருடன் வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாக ஸ்ரீதேவி , பூதேவி ,நீளா தேவியுடன் , ஜாம்பவதியையும் இங்கே தரிசிக்கலாம். 
ராமாவதாரத்தில் சீதை மீட்ப்புக்காக தனக்கு உதவியவர்களில் ஒருவனான ஜாம்பவானுக்கு நற்பேறு வழங்க விரும்பிய பெருமாள்  தன் கிருஷ்ணாவதாரத்தில் அவன் மகள் ஜாம்பவதியை மணம் புரிந்து கொண்டார். அந்த ஜாம்பவதியை இங்கே காணலாம். 
இவர்களுடன் பிருகு மகரிஷி,மார்க்கண்டேயர்,அருணன் ,கருடன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளார்கள். கோயிலின் மேல் தளத்தில் கருடன் வித்தியாச கோலம் காட்டுகிறார். நான்கு கரங்களுடன் , அமிர்த கலசம் தங்கியிருக்கிறார். சர்ப்பத்தை மாலையாக அணிந்து இருக்கிறார்.
உற்சவர் திருத்தங்கால் அப்பன் என்றழைக்கப்படுகிறார். ஆடிப்பூர விசேஷ நாளன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையையும், உடுத்தி க்களைந்த புடவையையும் எடுத்து வந்து இங்கே பெருமாளுக்கு சாத்தி மகிழ்கிறார்கள்.
தென்காசி - விருதுநகர் இரயில் மார்க்கத்தில் திருத்தண்கால் இரயில் நிலையத்திற்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது.
ஆலயம் சென்று வருவோம்.   பெருமாளை,தாயாரை சேவித்து வருவோம். 
நற்பேறு பெற்றிடுவோம். 


















No comments:

Post a Comment