Sunday, October 30, 2016


அன்புடையீர் வணக்கம்.
ஒவ்வொரு வருஷமும் தீபாவளி திருநாளில் வீட்டிலே முடங்கிக் கிடந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி நேரத்தைக் கழிப்பதை விடுத்து, பெரம்பூர் ஸ்ரீ சங்கராலயத்தை சேர்ந்த  சில சமூக ஆர்வலர்கள்,  மஹா பெரியவாள் ஆக்ஞைக்  கேற்ப  பெரம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்வதை கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த தீபாவளி திருநாளில் காலையிலேயே சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி 
 மூன்று குழுக்களாக பிரிந்து கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனை , ஐயனாவரம் ஆதரவற்றோர் இல்லம் மற்றும்  ESI மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தலையில் நல்லெண்ணெய் தங்கள் கைகளினாலேயே வைத்து , கையில் எடுத்து சென்ற கங்கா ஜலத்தை புரோக்ஷணம் செய்து உண்மையான கங்கா ஸ்நானம் செய்வித்தனர். பிறகு மங்கள சின்னங்களான குங்குமம் விபூதியை அணிவித்தனர் 

சென்னை KK நகரைசேர்ந்த ஒரு தம்பதியர் ( பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை ) சுமார் 1500 பாதுஷா , பிஸ்கெட்டுகள் , ஆகியவைகளை தமது மேற்பார்வையில்  சமையற்காரர்களைக் கொண்டு தயார் செய்து கொண்டு வந்திருந்தனர் . 

அப்பெருமகனாருக்கு  வயது 80க்கு மேல்  .இருப்பினும் தொண்டின் ஆர்வம் குறையாமல் மஹா பெரியவாளின் வேண்டுகோளினை நிறைவேற்றுவதில் ஒரு தீவிரம் கொண்டிருந்தனர் அத் தம்பதியர்.

அங்கிருந்தவர்களுக்கு சுவீட் , பிஸ்கெட்டுகள் வழங்கி "  ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர , " என்று முழங்க சொல்லி அவர்களை மகிழ்வித்தனர்.

மன நோய் மருத்துவ மனையில்  ஒரு சிலரின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்ததாம்.மதுவுக்கு அடிமையானவர்களும்    சிகிச்சை பெற்று வருகிறார்கள் . நன்கு தெளிந்தவர்கள்  தம் குடியினால் வாழ்க்கை சீர்கேடு அடைந்ததை விவரிக்கும்போது கண்களில் கண்ணீர் கசிந்தது .
"  ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர  " என்று முழங்கி ஓய்ந்தவுடன் ஒரு மன நோயாளி ஸ்ரீ குருவாயூரப்பனை குறித்த ஒரு பாடலைப் பாடியபோது அனைவரும் உணர்ச்சி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் பணிபுரிவோருக்கும் இனிப்புகள் , பிஸ்கெட்டுகள் வழங்கி அவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தனர் . 
இவ்விதமாக இந்த தீபாவளி திருநாளினை பயனுறும் வகையில் ஆதரவற்றோருக்கும் , சமுதாயத்தினால் புறம் தள்ளப்பட்டோருக்கும் சேவை செய்து திருப்தி அடைந்தது போற்றுதற்குரியது. இது போன்ற சேவையினை வர இருக்கும் பண்டிகை நாட்களில் இன்னும் பலரை இந்த மகோன்னத சேவையில் ஈடுபடுத்தி மக்கள் சேவையே மகேசன் சேவை.
வாழ்க  மனிதநேயம் !     வளர்க்க  அரிய சேவைகள்!! 

It is better to lit a candle than to curse the Darkness


Saturday, October 29, 2016




நிகழும் ஐப்பசி மாதம் 14 ஆம் தேதி (30-10-2016) ஞாயிற்றுக்கிழமை 
மாலை 6-00 மணிக்கு 
பெரம்பூர் நெ 3 மீனாக்ஷி தெருவில் இருக்கும்
 ஸ்ரீ சங்கராலயத்தில் அனைத்து ஆஸ்தீக
 நண்பர்களின் நலம் வேண்டி
 ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை நடைபெற உள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
மாலை 6-00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் 

மாலை 6-30  மணிக்கு ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை .
--------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ 100/- செலுத்தி சங்கல்பம் செய்து கொண்டு
 பூஜையில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை செய்த 
வெள்ளிக்காசு வழங்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்!
குபேர சம்பத் பெற்று
சந்தோஷமாக வாழ அழைக்கிறோம் !!!
அனைவரும் வருக !!
                     தலைவர்          : ஸ்ரீநாத்                      93825 17424,
                    செயலர்             : கல்யாணவரதன்  94444 52687,
                   பொருளாளர்    : இராஜாராமன்        044-2551 9804.


                                                                                                               

Thursday, October 27, 2016




         Sri Sathyanarayana Seva Samithi,    Perambur.
         Wishes all a happy and prosperous deepavali



Monday, October 24, 2016


In the year 1881, a professor asked his students whether it was God who created everything that exists in the Universe?

One student replied  " YES "

The professor asked " What about Evil ? Has God created evil also?"

The student got silent........
Then the student requested that may he ask a question ?

The professor allowed him to ask.
The student asked  " Does COLD exist ?

Professor replied " Yes. Dont you feel the cold dear ?"

Student said : I am sorry You are again wrong sir.     COLD is a complete absence of heat ......
There is no Cold. It is only an absence of HEAT.
The student asked " Does darkness exist? "

The professor replied firmly " Yes"

Student replied  " You are again wrong sir. There is no such thing like darkness. It is actually absence of light.
Sir! we always study light and heat but not cold and darkness.
Similarly, the evil does not exist. Actually it is the absence of Love and true belief in God."

The entire class students got up and applauded the student.

That intelligent student was Swamy Vivekananda.






Saturday, October 22, 2016



அனைவருக்கும் நமஸ்காரம்.
மாதா மாதம் நடக்கும் ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் இடையிடையில் நம் கல்யாண வரதன் மாமா சிறு சிறு நிகழ்ச்சிகள் , சுலோகங்கள் ,கதைகள் சொல்வார்கள். அவைகளை சிறு சிறு என்று கூறிவிட்டேன் மன்னிக்கவும் அவைகள் வாழ்வின் பேருண்மைகளை விளக்கும் பெரும் தத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நீங்கள் பகவானிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்களை மூடாமல் நன்றாக கண்களைத் திறந்து சுவாமியை கூர்ந்து கவனித்து உங்கள் குறைகளை கூறுங்கள். பணிவுடன் வேண்டுங்கள் . நீதான் கதி  என்று உங்களையே அவனிடம் ஒப்படையுங்கள். இதையே " ஆத்ம சமர்ப்பணம் " என்கிறோம் . பகவான் இந்த ஆத்ம சமர்ப்பணத்தைத்தான் எதிர்பார்க்கிறார் . உங்கள் குறை தீர்க்கவே , உங்களுக்கு அருள் ஆசி புரியவே அவர் தயாராக இருக்கிறார். உலகளவு செல்வம் கொண்டவர் அவர். நீங்கள் வேண்டுவது ஒரு கடுகளவு செல்வம் மட்டுமே. அதை வழங்குவதில் அவருக்கு சிரமம் இருக்காது. 

கீதையில் பகவான் ஸ்ரீ கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார் "  
" In the 12th chapter of Bagavath Geetha under the caption  Bakthi Yoga, Lord Krishna says to Arjuna not only to Arjuna but to all of us that   Hey Arjuna you penetrate your mind to God. But it is not at all possible at the first outset. Arjuna you perform puja, your  mind would be distracted. You freely allow your mind to wander and enjoy the worldly pleasure. But it is your duty Arjuna to bring back your maind and perform puja with concentration.One day or other slowly and slowly your mind will be attached with me firmly and permanently."

இதைப்போல ஒவ்வொரு பூஜையிலும் நாம் அள்ளிப்பருக அமுத வார்த்தைகள் அருவியாக கொட்டும். 
வாழ்க்கையில் நாம் ஏதாவது சிக்கல்களை சந்திக்க நேர்ந்தால் , அவைகளை சந்திக்க தேவையான மன உறுதியை , தெம்பினை நிச்சயம் அளிக்கும்.

இதைப்போல ஒவ்வொரு பூஜையிலும் நாம் அள்ளிப்பருக அமுத வார்த்தைகள் அருவியாக கொட்டும்.   அது வாழ்க்கையில் நாம் ஏதாவது சிக்கல்களை சந்திக்க நேர்ந்தால் , அவைகளை சந்திக்க தேவையான மன உறுதியை , தெம்பினை நிச்சயம் அளிக்கும்.

ஒரு முறைதான் பூஜையில் கலந்து கொள்ளுங்களேன் . உங்கள் வாழ்வில் மாற்றம் , திருப்பம் ஏற்றம் வருவதை உணருவீர்கள்  இது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல பலரும் உணர்ந்த உண்மை அனுபவம்.

மீண்டும் சந்திப்போம். 










Friday, October 21, 2016



நிகழும் ஐப்பசி மாதம் 14 ஆம் தேதி (30-10-2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 6-00 மணிக்கு பெரம்பூர் நெ 3 மீனாக்ஷி தெருவில் இருக்கும் ஸ்ரீ சங்கராலயத்தில் அனைத்து ஆஸ்தீக நண்பர்களின் நலம் வேண்டி ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை நடைபெற உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாலை 6-00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் 

மாலை 6-30  மணிக்கு ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை .
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ 100/- செலுத்தி சங்கல்பம் செய்து கொண்டு பூஜையில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை செய்த வெள்ளிக்காசு வழங்கப்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்!
      அனைவரும் வருக !!
குபேர சம்பத் பெற்று சந்தோஷமாக வாழ அழைக்கிறோம் !!!

                                                                                                               நிர்வாகிகள் 










Monday, October 17, 2016

                                                                      


            16-10-2016
16-10-2016 ஞாயிறு மாலை சுமார் 4-00 மணியளவில் ஸ்ரீ சத்யநாராயண பூஜை ஆறாவது ஆண்டு துவக்க விழாவாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து பூஜையில் கலந்து கொண்டு பகவானின் அருள் பெற்று சென்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஸ்ரீ சத்யநாராயண பூஜையினை பெரம்பூரில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய நாள் முதல் அதனை மாதம் தவறாமல் முறைப்படி நடத்தி வந்த முறைகளை , பக்தர்கள் காட்டும் ஆர்வத்தை , நன்கொடையாளர்கள் பணமாக , பொருளாக, அளித்து வருவதை எடுத்துக்கூறி செயலாளர் திரு கல்யாண வரதன் அவர்கள் மிகவும் மனம் நெகிழ்ந்தார் . தனக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வரும் தலைவர் திரு ஸ்ரீநாத் , பொருளாளர் திரு ராஜாராமன் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியறிதலை தெரிவித்துக்கொண்டார் .வர இருக்கும் காலங்களில் இன்னும் சிறப்பாக பூஜைகள் நடைபெற அனைவரின் ஒத்துழைப்பிணையும் , நன்கொடைகளையும் எதிர்நோக்கி இருப்பதாக கூறினார்.

விழா முக்கிய நிகழ்வாக பூஜை முடிந்ததும் 100 ரூபாய் நன்கொடை அளித்த ரசீது எண்களின் அடிப்படையில்  குலுக்கல்  நடத்தப்பட்டு அதன் மூலம்  8 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
முதல் பரிசு எண் 40 திரு நரசிம்மன் அவர்கள் . இவர் தம்பதி சமேதராக அன்னாவரம் சென்று அங்கு நடைபெறும் ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் கலந்து கொண்டு வர ஆகும் செலவை சமிதி ஏற்றுக்கொள்ளும் .
இரண்டாம் பரிசு எண்கள் 59 திரு பாலாஜி  மற்றும்  86 திருமதி ஜெயந்தி வைத்யநாதன் அவர்கள் . இந்த இருவருக்கு தலா 5கிராம்  கஜலஷ்மி உருவம் பதித்த வெள்ளி டாலர் வழங்கப்படும்.
மூன்றாம் பரிசு எண்கள் 54. திரு சுப்பராஜ், 22 திரு v.k முரளி ,101 திரு கணேசன் , 55 திருமதி மஹேஸ்வரி அவர்கள். இந்த ஐவருக்கும் தலா 2கிராம்  கஜலஷ்மி உருவம் பதித்த வெள்ளி டாலர் வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பூஜையை சிறப்பாக நடத்திவரும் செயலாளர் ஸ்ரீ கல்யாண வரதன் மாமா அவர்கள் சிறப்பாக பாராட்டப்பட்டார் , அவருக்கு உறுதுணையாக இருந்து பூஜைகளில் கைங்கர்யம் செய்துவரும் அவர் மனைவி திருமதி புஷ்பா அவர்களும் பாராட்டப்பட்டார் . தம்பதியருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. உறுப்பினர் அனைவருக்கும் சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது. வழக்கம்போல் பிரசாதங்கள் அளிக்கப்பட்டன .
நவம்பர் மாத பூஜை 13-11-2016 ஞாயிறு மாலை 4-00 மணிக்கு நடைபெறும். அனைவரும் வருக , பூஜையில் கலந்து கொண்டு உளமுருக ஸ்ரீ சத்யநாராயணனிடம் பிரார்த்திக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
வாருங்கள். கலியுக  தெய்வம் ஸ்ரீ சத்யநாராயணா பூஜையில் கலந்து கொண்டு பகவானின் பேரருளை பெற்று வாழ்வில் முன்னேறுங்கள்.

First Prize Winner Sri. Narasimhan 
Gift Articles
Secretary Mama is Felicitated
President Distributes Gift  
Treasurer Distributes Gift 
லோகா ஸமஸ்தா  சுகினோ பவந்து

Tuesday, October 11, 2016

ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி பெரம்பூரில் துவக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீ சத்யநாராயண பூஜை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது .இந்த இமாலய வெற்றிக்கு தோளோடு தோள் சேர்த்து கைங்கர்யத்தில் ஈடுபட்டுவரும்  சமிதியின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீநாத் , செயலாளர் ஸ்ரீ கல்யாணவரதன் , பொருளாளர் ஸ்ரீ ராஜாராமன் முறையே த்வைதம், விசிஷ்டாத்வைதம்  மற்றும் அத்வைதம் பிரிவுகளை சார்ந்தவர்கள் . 

மாத பூஜையில் கலந்து உளமுருக வேண்டி பிரார்த்தித்து அதன் பலனை அடைந்தவர்கள் பலர் உண்டு. கண்கண்ட தெய்வமாம் ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் நீங்களும் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகளை பகவானிடம் சமர்ப்பியுங்கள் .பலன் உங்களை தேடிவருவதை உணருவீர்கள் .

இம்மாத  ஸ்ரீ  சத்யநாராயண பூஜை ஆறாம் ஆண்டு துவக்க சிறப்பு பூஜையாக 16-10-2016 மாலை 4-00 மணிக்கு பெரம்பூர்  மீனாக்ஷி தெரு 3-ம் எண்ணில் உள்ள ஸ்ரீ சங்கராலயத்தில் நடத்தப்பட  உள்ளது.

அனைவரும் வருக,  பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு பாக்கியதாரர் ஆகும்படி கேட்டுக்கொள்கிறோம் .





President Sri Srinath           Secretary Sri Kalyanavaradhan             Treasurer Sri Rajaraman
த்வைதம்                           விசிஷ்டாத்வைதம்                       அத்வைதம்

இப்படிக்கு 
தலைவர்,செயலர்,பொருளாளர்,
மற்றும் உறுப்பினர்கள் 





Saturday, October 8, 2016



கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஸ்ரீ சத்யநாராயண பூஜையின் முடிவில் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது அந்த ஒளியில் சஞ்சீவி மலையினை கையில் ஏந்தி வானில் பறக்கும் ஸ்ரீ ஹனுமான்  போன்ற உருவம் தெரிந்தது.. இது  அதிசயமாக நிகழ்ந்த ஒரு அற்புத செயலாகும்.



Friday, October 7, 2016



பக்த கோடிகளுக்கு நமஸ்காரம்.

அக்டோபர் மாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை,  வெற்றிகரமான ஆறாம் ஆண்டு துவக்கமாக 16-10-2016 அன்று மாலை 4-00 மணிக்கு  சென்னை 11 , பெரம்பூர் நம்பர் 3 மீனாக்ஷி தெருவில் உள்ள 
ஸ்ரீ சங்கராலயத்தில் மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

முதல் ஆண்டு நிறைவு (2012)  பூஜையின்போது சமிதியின் பெயர் பொரித்த அங்கவஸ்த்திரம் சுமார் 150 பக்த கோடிகளுக்கு அளித்து மரியாதை செய்யப்பட்டது .

இரண்டாம் ஆண்டு நிறைவு (2013) பூஜையில் ஸ்ரீ சத்யநாராயணா சுவாமி போட்டோ லேமினேட் செய்யப்பட்டு சுமார் 200 பக்த கோடிகளுக்கு அளிக்கப்பட்டது.

மூன்றாம் ஆண்டு நிறைவு  (2014) ஸ்ரீ சத்யநாராயண சமிதி சார்பில் , நம் சமிதி பெயர் பொறிக்கப்பட்ட டிராவலர்ஸ் பேக்  சுமார் 210 நபர்களுக்கு அளிக்கப்பட்டது.

நான்காம் ஆண்டு நிறைவு (2015) ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் வரும் " சத்ரம் ஸமர்ப்பயாமி " என்ற  உபசாரத்திற் கேற்ப சேவா சமிதி பெயர் பொறிக்கப்பட்ட தரமான குடை சுமார் 230 பக்த கோடிகளுக்கு அன்பு பரிசாக அளிக்கப்பட்டது .

ஐந்தாம் ஆண்டு நிறைவு பூஜை 16-10-2016 அன்று மாலை நடைபெற உள்ளது        ஸ்ரீ சத்யநாராயண பூஜையின் போழ்து , நன்கொடை அளித்த பக்தர்களின் ரசீது counter foil  எண்கள் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 

முதல் பரிசாக:  அன்னாவரம்,  தம்பதி சமேதராக சென்று வர ஆகும் செலவுகளை நம் சமிதி ஏற்றுக்கொள்ளும்.

இரண்டாம் பரிசாக தலா  5 கிராம் வெள்ளி காசு இருவருக்கு வழங்கப்படும் .

மூன்றாம் பரிசாக தலா   2 கிராம் வெள்ளி காசு ஐந்து பேர்களுக்கு வழங்கப்படும். 

இது தவிர அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

அனைவரும் திரளாக வந்து பகவத் கைங்கர்யத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ சத்தியநாராயணன் அருள் பெற 
அன்புடன் அழைக்கிறோம்.

சமிதியின் வளர்ச்சிக்கு பக்த கோடிகளிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன .

ஆன்லைனில் நன்கொடையினை அளிக்க விரும்புவோர் வசதிக்காக விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிட்டி யூனியன் பேங்க் , பெரம்பூர் கிளை IFSC Code  CIU0000261 
S /B   a /c  எண் 26 100 100 138 7359

joint SB a /c  K.V .கல்யாணவரதன்  & S. ராஜாராம் 

லோகா ஸமஸ்தா  சுகினோ பவந்து .

கல்யாணவரதன் ,
செயலாளர் , 
ஸ்ரீ சத்யநாராயண சமிதி , பெரம்பூர்.
94444 52687