Wednesday, July 19, 2017

PART TWO
பித்தாபுரம் கோவிலை தரிசித்தபின் சம்பாகோட் எனும் ஊரில் உள்ள சிவன் கோவில் மிக பிரசித்தி பெற்றது அதை காணலாம் என்று டிரைவர் எங்களை சுமார் 50 கிலோமீட்டர் பஸ்ஸில் அழைத்துப்போனார். ( காக்கிநாடா வழியாக) ஊர் ரொம்ப நன்னா இருக்கு.இரவு 8-00 மணியாகி விட்டது.கோவிலை அடைந்தோம்.சுயம்புவான சிவலிங்கம்.சிவலிங்கத்தின் உயரம் 14 அடி.இதைப்போன்ற சிவன் கோவில்கள் மேலும் 5 உள்ளனவாம். ஆந்திரா தலைநகரான அமராவதியில் மற்றோரு கோவில் உள்ளது.பீமேஸ்வரா என்று அழைக்கப்படும் மூலவர்  சிவலிங்கத்தின் அடிப்பகுதியை ground Floor-ல் பார்த்து விட்டு முதல் மாடியில் உச்சிப்பகுதியை பார்த்தோம். லிங்கம் 14 அடி உயரம் ( இதைப்போன்ற கோவில்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நினைக்கிறேன். அர்த்த சாம பூஜை பார்த்தோம்.தாள வாத்தியங்கள் ஒலி அருமையாக இனிமையாக இருந்தன.அன்று நாங்கள் ராஜமுந்திரி ஹோட்டல் போய்சேர இரவு மணி 11-00 ஆகி விட்டது.
மறு நாள் காலை 0500 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் இரயிலில் ஏறினோம்.0845 மணியளவில் விசாகப்பட்டினத்தை அடைந்து 3 டவேரா கார்களில் அங்கிருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் சிம்மாசலம் சென்றோம். வராக நரசிம்மர். சுவாமி மிக உக்கிரம் என்பதால் முழுவதும் சந்தனத்தை முழுவதுமாக சாத்தி இருக்கிறது. நாங்கள் சென்றது 15/07/17 அன்று சனிக்கிழமை எனவே  கோவிலில்.நல்ல கூட்டம் இருந்தது.
சேவித்து விட்டு ரயில்வே ஸ்டேஷன் வந்து மதியம் 2-00 மணி ஹவுரா-சென்னை மெயில் வண்டியில் ஏறினோம்.
இரவு டிபன் விஜயவாடாவில் ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார்கள்.இரவு 09-00 மணிக்கு விஜயவாடா அடையும்.10 நிமிடங்கள் நிற்கும் இரயில் இன்ஜின் மாற்றுவதால். விஜயவாடா வந்ததும் நான் பிளாட்பாரத்தில் நின்று நம் குரூப்பில் உள்ள எவரேனும் டிஃபனுடன் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கள் குரூப்பில் 26 பேர் 3ac யில் reserve செய்திருந்தார்கள் எனக்கும் என் மனைவிக்கும் vacant இல்லாமையால் 2nd ஸ்லீப்பரில் reserve ஆகியிருந்தது .S 1 பெட்டி guard இருக்கும் பகுதியில் இருந்தது .AC கோச்சுகள் டிரைவர் இருக்கும் பகுதியில் இருந்தது.அவை இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் மிக மிக அதிகம்.யாரும் வரப்போவதில்லை காரணம் தூரம் அதிகம் ரயில் நிற்கும் நேரம் குறைவு.மேலும் இரவு நேரம் என்று நான் யோசித்து கொண்டிருக்கும் வேளையில் மோகன் சார் என்ற குரல் கேட்டு திரும்பினால் அங்கே கல்யாண வரதன் மாமா நிற்கிறார். டிபன் பொட்டலங்களை மாமியிடம் கொடுத்து விட்டேன் உங்களை அங்கே காணவில்லை என்றார் . என் கண்ணெதிரே நிற்பது ஒரு மனித உருவமாக தெரியவில்லை.சாட்சாத் குருவாயூரப்பனே பிரசாதம் கொடுத்து விட்டு சிரித்துக்கொண்டு இருப்பதைப்போல இருந்தது.டிபன் என்பது பெரிதல்ல ஆனால் அத்துணை சிரமம் எடுத்து ஒரு சாதாரண குரூப் மெம்பர் க்கு வாக்கு கொடுத்த வண்ணம் உணவினை சேர்ப்பித்த கல்யாண வரதன் மாமாவின் கால்களை கட்டிக்கொண்டு கண்ணீர் (நன்றி கண்ணீர்) விட்டு நன்றி பகல வேண்டும் போல இருந்தது. நேரம் ஆயிடுத்து ரொம்ப தூரம் போகணுமோல்லியோ நான் வரேன் என்று சொல்லி போய்விட்டார்.
இவ்வாறாக வந்திருந்த அத்துணை பேரையும் கண்ணென காத்து சிறப்பான ஏற்பாடுகள் செய்து யாத்திரை அழைத்துச் சென்றதை என்னால்,எங்களால் மறக்க முடியாது.
இது போன்ற  ஒரு யாத்திரை என்றோ எங்கேயோ யாமறியோம்.






















No comments:

Post a Comment