Sunday, July 16, 2017

அனைவருக்கும் நமஸ்காரம்.
இம்மாதம் 13-07-2017 அன்று இரவு சத்யநாராயண சேவா சமிதி உறுப்பினர்கள் சுமார் 26 பேர்கள் அடங்கிய ஒரு குழு சேவா சமிதியின் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீநாத் அவர்களின் சீரிய ஏற்பாடுகளின் பேரில் ,  செயலர் ஸ்ரீ கல்யாண வரதன் அவர்கள் தலைமையில் ஸ்ரீ சத்யநாராயண பூஜையின் இருப்பிடமாம் , நித்திய விரதங்கள் நிகழும் பூலோக சொர்க்கமாம் அன்னாவரம் திருத்தலத்திற்கு யாத்திரை புறப்பட்டது.
இனிதான இரயில் பயணத்திற்குப்பின் ராஜமுந்திரியில் அருமையான ஹோட்டலில் அறைகள் எடுத்து தங்க வைக்கப்பட்டோம் . எங்கள் குழுவிற்காகவே ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீ நாத் அவர்கள். ஹோட்டலிலிருந்து நேரே கோதாவரி நதி ஸ்நானம். மிக ஆனந்தமான குளியல். கல்யாண மாமா எல்லோருக்கும் சங்கல்பம் செய்து வைத்தார்கள். நெஞ்சளவு நீரில் நின்று கொண்டு சங்கல்ப மந்திரங்களை திரும்ப சொன்னது மிக தெய்வீக அனுபவம். குளிர்ந்த நீரிலிருந்து கரையேறவே மனசு வரலை. பிறகு காலை உணவினை முடித்துக்கொண்டு அன்னாவரம் பஸ்ஸில் புறப்பட்டோம். மிக ரம்மியமான பஸ் பயணம் அது.தெருவின் இரு பக்கமும் பச்சை பசேல் என செடிகள்,மரங்கள்,நெல் வயல்கள்,தென்னந்தோப்புகள் ,வாழை மரங்கள் வெள்ளந்தியாய் தெலுங்கில் பேசும் மக்கள் ஆஹா உண்மையிலேயே பகவான்   வாழும் பூமியாக கிராமங்களை கூறலாம்.. இரண்டு மணி நேர இன்ப பயணத்திற்குப்பின் அன்னாவரம் அடைந்தோம்.
சிறிய மலைக்குன்று. மலையின் அடிவாரத்திலேயே வரவேற்பு வளைவுகள் அனைவரையும் முகமன் கூறி வரவேற்கின்றன.பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஸ்ரீநாத் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் எங்கள் அனைவருக்கும் ஸ்பெஷல் தரிசனம் கிடைத்தது. சுவாமிக்கு மிக அருகில் சென்று சேவிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிட்டியது.சுவாமியை சேவிக்கும்போது ஏற்பட்ட ஆனந்த பரவசத்தை வார்த்தைகளால் வடிதாது.க்க முடியாது. அத்துணை பேரின்பம் அனைவரும் அடைந்தோம் .
ஜெரிகண்டி என்று 2 அல்லது 3 முறை கூறியபின்தான் நாங்கள் இந்த உலகத்திற்கு திரும்பினோம். கல்யாண மாமா அடிக்கடி பூஜையின் முடிவில் பிரசங்கம் செய்யும்போது ,கடவுளுடன் பேசுங்கள், அவனே கதி என்று வேண்டி நில்லுங்கள்.உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவே அவன் காத்திருக்கிறான் என்பார். அவ்வாறே நாங்கள் அனைவரும் ஸ்ரீ சத்யநாராயண னிடம் பேசினோம்.,கண்கள் கசிந்து வேண்டினோம்.குறைகளை முன்வைத்தோம்.அனைத்தையும் ஏற்று நல்லது செய்வார்,இன்னல் களைவார் என்று நம்பி வெளியே வந்தோம் 
கோவில் உணவு உண்டோம்.எளிய ஆனால் சுவைமிகு உணவாக இருந்தது.வாழை இலையை ஒருமாதிரியாக போட்டு உணவு பரிமாறினார்கள் ( படத்தில் காண்க) 
பிறகு அங்கிருந்து புறப்பட்டு பித்தாபுரம் என்ற ஷேத்திரம் வந்து 18 சக்தி பீடத்தில் ஒன்றான ஸ்ரீ புருஹுடிக்கா  அம்மனை தரிசித்தோம் . ஸ்ரீ தத்தாத்திரேய சுவாமி, ஸ்ரீ குக்குடேஸ்வரர் ( சுயம்பு லிங்கம்) ஸ்ரீ ஐயப்பன் மற்றும் பல தெய்வங்களை தரிசித்தோம்.
(வழிபாட்டு நிகழ்வுகள் தொடரும் )




































No comments:

Post a Comment