Wednesday, July 19, 2017

PART TWO
பித்தாபுரம் கோவிலை தரிசித்தபின் சம்பாகோட் எனும் ஊரில் உள்ள சிவன் கோவில் மிக பிரசித்தி பெற்றது அதை காணலாம் என்று டிரைவர் எங்களை சுமார் 50 கிலோமீட்டர் பஸ்ஸில் அழைத்துப்போனார். ( காக்கிநாடா வழியாக) ஊர் ரொம்ப நன்னா இருக்கு.இரவு 8-00 மணியாகி விட்டது.கோவிலை அடைந்தோம்.சுயம்புவான சிவலிங்கம்.சிவலிங்கத்தின் உயரம் 14 அடி.இதைப்போன்ற சிவன் கோவில்கள் மேலும் 5 உள்ளனவாம். ஆந்திரா தலைநகரான அமராவதியில் மற்றோரு கோவில் உள்ளது.பீமேஸ்வரா என்று அழைக்கப்படும் மூலவர்  சிவலிங்கத்தின் அடிப்பகுதியை ground Floor-ல் பார்த்து விட்டு முதல் மாடியில் உச்சிப்பகுதியை பார்த்தோம். லிங்கம் 14 அடி உயரம் ( இதைப்போன்ற கோவில்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நினைக்கிறேன். அர்த்த சாம பூஜை பார்த்தோம்.தாள வாத்தியங்கள் ஒலி அருமையாக இனிமையாக இருந்தன.அன்று நாங்கள் ராஜமுந்திரி ஹோட்டல் போய்சேர இரவு மணி 11-00 ஆகி விட்டது.
மறு நாள் காலை 0500 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் இரயிலில் ஏறினோம்.0845 மணியளவில் விசாகப்பட்டினத்தை அடைந்து 3 டவேரா கார்களில் அங்கிருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் சிம்மாசலம் சென்றோம். வராக நரசிம்மர். சுவாமி மிக உக்கிரம் என்பதால் முழுவதும் சந்தனத்தை முழுவதுமாக சாத்தி இருக்கிறது. நாங்கள் சென்றது 15/07/17 அன்று சனிக்கிழமை எனவே  கோவிலில்.நல்ல கூட்டம் இருந்தது.
சேவித்து விட்டு ரயில்வே ஸ்டேஷன் வந்து மதியம் 2-00 மணி ஹவுரா-சென்னை மெயில் வண்டியில் ஏறினோம்.
இரவு டிபன் விஜயவாடாவில் ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார்கள்.இரவு 09-00 மணிக்கு விஜயவாடா அடையும்.10 நிமிடங்கள் நிற்கும் இரயில் இன்ஜின் மாற்றுவதால். விஜயவாடா வந்ததும் நான் பிளாட்பாரத்தில் நின்று நம் குரூப்பில் உள்ள எவரேனும் டிஃபனுடன் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கள் குரூப்பில் 26 பேர் 3ac யில் reserve செய்திருந்தார்கள் எனக்கும் என் மனைவிக்கும் vacant இல்லாமையால் 2nd ஸ்லீப்பரில் reserve ஆகியிருந்தது .S 1 பெட்டி guard இருக்கும் பகுதியில் இருந்தது .AC கோச்சுகள் டிரைவர் இருக்கும் பகுதியில் இருந்தது.அவை இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் மிக மிக அதிகம்.யாரும் வரப்போவதில்லை காரணம் தூரம் அதிகம் ரயில் நிற்கும் நேரம் குறைவு.மேலும் இரவு நேரம் என்று நான் யோசித்து கொண்டிருக்கும் வேளையில் மோகன் சார் என்ற குரல் கேட்டு திரும்பினால் அங்கே கல்யாண வரதன் மாமா நிற்கிறார். டிபன் பொட்டலங்களை மாமியிடம் கொடுத்து விட்டேன் உங்களை அங்கே காணவில்லை என்றார் . என் கண்ணெதிரே நிற்பது ஒரு மனித உருவமாக தெரியவில்லை.சாட்சாத் குருவாயூரப்பனே பிரசாதம் கொடுத்து விட்டு சிரித்துக்கொண்டு இருப்பதைப்போல இருந்தது.டிபன் என்பது பெரிதல்ல ஆனால் அத்துணை சிரமம் எடுத்து ஒரு சாதாரண குரூப் மெம்பர் க்கு வாக்கு கொடுத்த வண்ணம் உணவினை சேர்ப்பித்த கல்யாண வரதன் மாமாவின் கால்களை கட்டிக்கொண்டு கண்ணீர் (நன்றி கண்ணீர்) விட்டு நன்றி பகல வேண்டும் போல இருந்தது. நேரம் ஆயிடுத்து ரொம்ப தூரம் போகணுமோல்லியோ நான் வரேன் என்று சொல்லி போய்விட்டார்.
இவ்வாறாக வந்திருந்த அத்துணை பேரையும் கண்ணென காத்து சிறப்பான ஏற்பாடுகள் செய்து யாத்திரை அழைத்துச் சென்றதை என்னால்,எங்களால் மறக்க முடியாது.
இது போன்ற  ஒரு யாத்திரை என்றோ எங்கேயோ யாமறியோம்.






















Sunday, July 16, 2017

அனைவருக்கும் நமஸ்காரம்.
இம்மாதம் 13-07-2017 அன்று இரவு சத்யநாராயண சேவா சமிதி உறுப்பினர்கள் சுமார் 26 பேர்கள் அடங்கிய ஒரு குழு சேவா சமிதியின் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீநாத் அவர்களின் சீரிய ஏற்பாடுகளின் பேரில் ,  செயலர் ஸ்ரீ கல்யாண வரதன் அவர்கள் தலைமையில் ஸ்ரீ சத்யநாராயண பூஜையின் இருப்பிடமாம் , நித்திய விரதங்கள் நிகழும் பூலோக சொர்க்கமாம் அன்னாவரம் திருத்தலத்திற்கு யாத்திரை புறப்பட்டது.
இனிதான இரயில் பயணத்திற்குப்பின் ராஜமுந்திரியில் அருமையான ஹோட்டலில் அறைகள் எடுத்து தங்க வைக்கப்பட்டோம் . எங்கள் குழுவிற்காகவே ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீ நாத் அவர்கள். ஹோட்டலிலிருந்து நேரே கோதாவரி நதி ஸ்நானம். மிக ஆனந்தமான குளியல். கல்யாண மாமா எல்லோருக்கும் சங்கல்பம் செய்து வைத்தார்கள். நெஞ்சளவு நீரில் நின்று கொண்டு சங்கல்ப மந்திரங்களை திரும்ப சொன்னது மிக தெய்வீக அனுபவம். குளிர்ந்த நீரிலிருந்து கரையேறவே மனசு வரலை. பிறகு காலை உணவினை முடித்துக்கொண்டு அன்னாவரம் பஸ்ஸில் புறப்பட்டோம். மிக ரம்மியமான பஸ் பயணம் அது.தெருவின் இரு பக்கமும் பச்சை பசேல் என செடிகள்,மரங்கள்,நெல் வயல்கள்,தென்னந்தோப்புகள் ,வாழை மரங்கள் வெள்ளந்தியாய் தெலுங்கில் பேசும் மக்கள் ஆஹா உண்மையிலேயே பகவான்   வாழும் பூமியாக கிராமங்களை கூறலாம்.. இரண்டு மணி நேர இன்ப பயணத்திற்குப்பின் அன்னாவரம் அடைந்தோம்.
சிறிய மலைக்குன்று. மலையின் அடிவாரத்திலேயே வரவேற்பு வளைவுகள் அனைவரையும் முகமன் கூறி வரவேற்கின்றன.பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஸ்ரீநாத் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் எங்கள் அனைவருக்கும் ஸ்பெஷல் தரிசனம் கிடைத்தது. சுவாமிக்கு மிக அருகில் சென்று சேவிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிட்டியது.சுவாமியை சேவிக்கும்போது ஏற்பட்ட ஆனந்த பரவசத்தை வார்த்தைகளால் வடிதாது.க்க முடியாது. அத்துணை பேரின்பம் அனைவரும் அடைந்தோம் .
ஜெரிகண்டி என்று 2 அல்லது 3 முறை கூறியபின்தான் நாங்கள் இந்த உலகத்திற்கு திரும்பினோம். கல்யாண மாமா அடிக்கடி பூஜையின் முடிவில் பிரசங்கம் செய்யும்போது ,கடவுளுடன் பேசுங்கள், அவனே கதி என்று வேண்டி நில்லுங்கள்.உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவே அவன் காத்திருக்கிறான் என்பார். அவ்வாறே நாங்கள் அனைவரும் ஸ்ரீ சத்யநாராயண னிடம் பேசினோம்.,கண்கள் கசிந்து வேண்டினோம்.குறைகளை முன்வைத்தோம்.அனைத்தையும் ஏற்று நல்லது செய்வார்,இன்னல் களைவார் என்று நம்பி வெளியே வந்தோம் 
கோவில் உணவு உண்டோம்.எளிய ஆனால் சுவைமிகு உணவாக இருந்தது.வாழை இலையை ஒருமாதிரியாக போட்டு உணவு பரிமாறினார்கள் ( படத்தில் காண்க) 
பிறகு அங்கிருந்து புறப்பட்டு பித்தாபுரம் என்ற ஷேத்திரம் வந்து 18 சக்தி பீடத்தில் ஒன்றான ஸ்ரீ புருஹுடிக்கா  அம்மனை தரிசித்தோம் . ஸ்ரீ தத்தாத்திரேய சுவாமி, ஸ்ரீ குக்குடேஸ்வரர் ( சுயம்பு லிங்கம்) ஸ்ரீ ஐயப்பன் மற்றும் பல தெய்வங்களை தரிசித்தோம்.
(வழிபாட்டு நிகழ்வுகள் தொடரும் )




































Monday, July 10, 2017

அன்புள்ள ஸ்ரீ சத்யநாராயண பக்த கோடிகளுக்கு ,
அநேக நமஸ்காரம்/ ஆசீர்வாதம் .
ஜூலைமாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை வெகு விமரிசையாக 09-07-2017 அன்று நடைபெற்றது. பூஜை மாலை 4-00 மணிக்கே துவங்கி விட்டது.சுமார் 100க்கு மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு பூஜை முடிவில் ஸ்ரீ சத்யநாராயணா சுவாமியிடம் மனம் உருகி பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
திரு.கல்யாண வரத்தன் மாமா அவர்கள் பூஜையின் முடிவில் பேசும்போது சுவாமியை தரிசனம் செய்யும்போது கண்களை மூடிக்கொள்ளாதீர்கள் . கண்களை நன்கு திறந்து சுவாமியைப்பார்த்து பேசுங்கள்.அவர் உங்கள் நண்பன்.உங்கள் கோரிக்கைகளை தீர்த்து வைக்க காத்திருக்கிறார்.அவர் உருவத்தை, தோற்றத்தை கண்கள் எனும் லென்ஸால் வாங்கி நினைவு எனும் ஹார்ட் டிஸ்கில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் மனக்கண் முன்னால் சுவாமியை கொண்டு வர முடியும்.என்கிறார்.பகவான் முன்னால் நம்மை நாமே ஆத்ம சமர்ப்பணம் செய்து நீயன்றி எனக்கு வேறு யாருமில்லை என்று உளமுருக வேண்டிக்கொள்ளுங்கள்.என்று சில நிமிடங்கள் பிரார்த்தனைக்காக ஒதுக்கினார்.
இன்றைய பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்த திரு சிவசங்கரன் அவர்கள் கடந்த சில மாதங்களாக அவர் சொந்த கோரிக்கைகளை வேண்டுதல்களாக சுவாமியிடம் வைத்துள்ளார்.அவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதாக கூறினார். 
கேட்டதை அருளும் கண்கண்ட தெய்வம் அவர். இந்த செய்தியினைக் காணும் அன்பர்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற அவசியம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு பெரம்பூர் மீனாக்ஷி தெருவில் இருக்கும் சங்கராலயத்தில் நடைபெறும் பூஜையில் தவறாது கலந்துகொண்டு உளமுருக பிரார்த்தித்து பலன் காண்க பயன் பெறுக என்று அன்புடன் அழைக்கிறோம்.
ஸ்ரீராம் ,                         தலைவர்.
கல்யாண வரதன்   ,  செயலர் 
ராஜாராமன்                 பொருளாளர் 
94444 52687
Smt.&Sri.Sivasankaran

Friday, July 7, 2017


அன்புள்ள பக்தகோடிகளுக்கு ,
ஜூலை     மாத  ஸ்ரீ சத்யநாராயணா பூஜை
 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை 
மாலை 4-0 மணிக்கு 
 மீனாக்ஷி தெருபெரம்பூர் 
ஸ்ரீ சங்கராலயத்தில் 
சிறப்பாக நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு
 கண்கண்ட தெய்வமாம்  
ஸ்ரீ சத்யநாராயணனின் 
அருளுக்கு பாத்திரதாரர்கள் ஆகும்படி 
 கேட்டுக்கொள்கிறோம்.

பூஜை சாமான்களுக்காகவும்  பிரசாதம்
 மற்ற செலவுகளுக்காகவும்  
நன்கொடைகள் 
வரவேற்கப்படுகின்றன.
நன்கொடைகளை  பணம்காசோலை
பூ , பழம்நெய்,சர்க்கரை 
 போன்ற கைங்கர்ய பொருட்களாகவும்  
 மற்ற பூஜை பொருட்களாகவும் வழங்கலாம்

 விபரங்களுக்கு 
தலைவர்/செயலர்/பொருளாளரை 
கலந்தாலோசிக்கவும்.
அனைவரையும் வருக வருக என 
வரவேற்கிறோம்.

இங்கனம் 
தலைவர்,செயலர்  மற்றும் நிர்வாகிகள் 
ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி 
பெரம்பூர் 
94444 52687,