Thursday, February 2, 2017

             ஞாநாநந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாகிருதிம் 
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ உபாஸ்மஹே :

அனைத்து விதமான கல்வி மற்றும் வித்யைகளுக்கும் ஆதாரமான ஹயக்ரீவரை உபாசிக்கிறேன் என்று பிரார்த்தனை செய்து கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் பலர்.
            வருகிற மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நமது குழந்தைகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பெரியவர்களுக்கு அவர்கள் செய்யும் பணிகளில் சிறப்படையவும் தான தான்ய பாக்யம் ஏற்படவும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயவதன க்ருபாகடாக்ஷம் பரிபூரணமாக கிடைக்கவும் வேண்டி " ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவ " ஹோமம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                                             " தனம் இச்சேத் ஹுதாஸன " என்ற வேத வாக்கியப்படி சிறப்புடன் செய்யப்படும் ஹோமங்களில் கலந்து கொள்பவர்களுக்கு கல்விசெல்வம், பொருட்செல்வம் மற்றும் அனைத்து செல்வங்களும் , நினைத்த காரியங்களும் கைக்கூடும்.என்று தர்ம சாஸ்த்திரம் சொல்கிறது.
            ஹோமம் நடைபெறும் நாள் & இடம் 
19-02-2017  ஞாயிற்றுக்கிழமை 
காலை 09.00 மணி முதல்  பகல் 12.00 மணி வரை.
இடம்:  ஸ்ரீரங்க ராஜலக்ஷ்மி ஹால் 
 ( கலிகி  ரங்கநாதன் மாண்ட்போர்ட் பள்ளி பின்புறம்)
எண் .100 பட்டேல் ரோடு பெரம்பூர் சென்னை -11

                  சிறப்பு பிரசாதமாக அனைவருக்கும் பூஜையில் வைக்கப்பட்ட PENSET ஒன்றும் ஸ்ரீஹயக்ரீவரின் படமும் ,ஹோம ரக்ஷையும் அளிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்கு வலது கையில் ஸ்ரீஹயக்ரீவ ரக்ஷையாக கங்கணம் அணிவிக்கப்படும்.
                       கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஸ்ரீஹயக்ரீவர் ஹோமத்தில் பங்கு கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களும் , பலன் அடைந்தவர்களும் எங்களை ஊக்குவித்தும் ஆதரவு நல்கியும் வருவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
                      அனைவருக்கும் பிரசாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், வாக்கு வன்மையால் நினைத்த காரியங்கள் தடையின்றி வெற்றி பெறவும் லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வில் சிறப்படையவும் ரூ 100/- செலுத்தி ரசீது பெற்று ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரின் பரிபூரண கிருபா கடாக்ஷத்தை பெற அனைவரையும் வருக வருக என அழைக்கிறோம்.
                      ஹோம திரவியங்களுக்கும்  ஹோமம் நடத்தும் வித்துவான்கள் சம்பாவணைக்கும் ,மாணவ மாணவியருக்கும் வழங்கப்படவிருக்கும் பிரசாதங்களுக்கும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன .

இங்ஙனம் 
நிர்வாகிகள் 
ஸ்ரீசத்ய நாராயண சேவா சமிதி,
பெரம்பூர்.
94444 52687




   





  



  















No comments:

Post a Comment