Monday, January 16, 2017


முன்னோருக்கு நற்கதி அருளும் 

தஞ்சை மாவட்டம் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது  " திருப்புள்ளப் பூதங்குடி  " 'புள்' என்றால் பறவை. பறவை அரசனாகிய ஜடாயுவுக்கு மோட்சகதி அருளிய ராமன் அருள்பாலிக்கும் அற்புதமான திருத்தலம் இது.

மூலவர் ராமன் , சக்கரவர்த்தி திருமகனாக தெற்கில் தலை வைத்து யனத் திருக்கோலத்தில் அருள்புரிய, உற்சவர் வாழ்வில் ராமனாக நான்கு திருக்கரங்களோடு சேவை சாதிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.. வல்வில்  என்றால் வலிமையான வில்லை உடைய ராமன் என்று பொருள். " பொற்றாமரையாள்  " எனும் திரு நாமத்துடன்  பூமாதேவி இங்கு தாயாராக அருளுவது வெகு விசேஷம் என்கிறார்கள்.

சீதையைத் தேடி வந்த ராமன் குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவைக் காண்கிறார். சீதாவை ராவணன் கவர்ந்து சென்ற தகவலை ராமனிடம் சொல்லிவிட்டு , அவருடைய மடியிலேயே உயிர் விடுகிறார் ஜடாயு.. அவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய , மனைவியும் உடனிருத்தல் அவசியம். ராமன் சீதாதேவியை மனத்தால் நினைக்க ,பூமி பிராட்டியே இங்கே " ஹேமாம்புஜ வல்லி " (    பொற்றாமரையாள் ) தாயாராக எழுந்தருளியுள்ளாராம் .பிறகு அருகில் இருந்த புன்னை மரத்தடியில் அமர்ந்து சிரமப்பரிகாரம் செய்து கொண்டு சடங்குகளை முடித்து ஜடாயுவிற்கு முக்தி அளித்தார் ராமபிரான். இன்றைக்கும் மிகப் பழமையான புண்ணை மரத்தை இந்தக்கோயிலில் தரிசிக்கலாம். 

திருமங்கையாழ்வார் இவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது நான்கு கரங்களுடன் திகழும் ராமனை வேறு ஏதோ தெய்வம் என்று எண்ணி , கவனியாது சென்றாராம்.அப்போது பெரும் ஒளிவெள்ளத்துடன் ஆழ்வாருக்கு காட்சி தந்து தான் யார் என்று உணர்த்தினாராம் ஸ்ரீராமன் .
பரவசப்பட்ட திருமங்கையாழ்வார் " அறிய வேண்டியதை அறியாமல் சென்று விட்டேனே " என்று வருந்தி அதே பொருளில் " அறிவதறியான் அனைத்துலகும் உடையான்" என்று தொடங்கி பத்துப் பாடல்களை பாடியதாக தல  புராணம் உரைக்கிறது.
வைணவத் தங்களில் புதனுக்கு உரிய பரிகாரத் தலமாக அமைந்திருக்கும் இந்த தம் , ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தோர் பரிகாரம் செய்யவும் உகந்த இடம் என்கிறார்கள். முன்னோருக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஏதேனும் விடுப்பட்டுப் போயிருந்தால் அமாவாசை தினத்தில் இங்கு வந்து மஹா சங்கல்பம் செய்து முன்னோர் பிரார்த்தனையை நிறைவேற்றினால் முன்னோரின் ஆன்மா நற்கதி அடைய வாழ்வில் ராமன் அருள்புரிவார்.அதன் விளைவாக பித்ரு தோஷங்களும் , சாபங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
உற்சவர்  வைகுண்ட ஏகாதசி புறப்பாடு 
எல்லா கோவில்களிலும் ஸ்ரீராமர் நின்ற கோலத்திதான் சேவை சாதிப்பது வழக்கம். ஆனால் இந்தக் கோவிலில் ஸ்ரீராமர் சயன கோலத்தில் சேவை சாதிப்பது சிறப்பு.

No comments:

Post a Comment