Sunday, December 11, 2016


பக்த கோடிகளுக்கு நமஸ்காரம் .
டிசம்பர் மாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை மிக சிறப்பாக 11-12-2016 ஞாயிறு மாலை 0400 மணிக்கு நடைபெற்றது. சுமார் 100 பக்தர்களுக்கு மேல்  கலந்து கொண்டு ஸ்ரீ சத்தியநாராயணனின் பேரருளுக்கு பாக்யதாரர் ஆனார்கள். 
இந்த மாதம் ஸ்ரீ கல்யாணவரதன் மாமா தம்முடைய பிரசங்கத்தில் கூட்டு பிரார்த்தனை குறித்து சிறப்பாக பேசினார். 
ஒரு தெருவுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டுமென்றால் அங்கு வசிப்பவர்கள் ஒன்றாகக் கூடி மனு அளித்தால் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதைப்போல , நாம் அனைவரும் ஒன்றாக உள்ளமுருக வேண்டிக்கொண்டால் நிச்சயம் ஸ்ரீ பகவான் அருள் புரிவான். நமக்கு வேண்டுவதை அருளவே அவன் காத்திருக்கிறான். அவன் வேண்டுவதெல்லாம் நம்முடைய உண்மையான பக்தியும் ஆத்ம சமர்ப்பணமும்தான் .

இன்று பூஜையில் கலந்துகொண்ட திரு சீனிவாசன் தான் ஸ்ரீ சத்தியநாராயணன் அருளால் மிகப்பெரிய கண்டத்திலிருந்து தப்பித்ததை மயிர் சிலிர்க்க எடுத்துரைத்தார்.
சுமார் 25 நாட்களுக்கு முன்னால் அவர் தன்னுடைய மோட்டார் பைக்கில் அவருக்கு சொந்தமான பாக்டரிக்கு பணியின் நிமித்தம் செல்கிறார். அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கு " புரோக்ஷணம்" செய்வதற்காக ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் வழங்கப்பட்ட தீர்த்தத்தை ஒரு பெட் பாட்டிலில் எடுத்துச்செல்கிறார். செல்லும் போது ஓரிடத்தில் காலமிது பைக் ஏறி கீழே விழுந்து விடுகிறார். தலையும் தரையில் பட்டுவிட்டது. ஆனால் தலை அடிபடாமல் ஏதோ ஒரு பொருள் தலையணை போல் அவரை காத்து நிற்கிறது. அது அவர் எடுத்து சென்ற ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் கொடுக்கப்பட்ட தீர்த்த பெட் பாட்டில் அவர் பையிலிருந்து  விழுந்து அவர் தலையடியில் தலையணை போல் காத்து நிற்கிறது. என்னே ஸ்ரீ பகவானின் பேரருள்! திரு சீனிவாசனின் போட்டோ இந்த பகுதியிலேயே உள்ளது.
ஆண்டவன் இன்றும் இருக்கின்றான்.
அவன் அன்பர்களை என்றும் காக்கின்றான்.
Prasadam Distribution

Mr & Mrs Srinivasan

Friday, December 9, 2016



அன்புடையீர் 
நமஸ்காரம்/ ஆசிர்வாதம் 

 டிசம்பர்  மாத 
ஸ்ரீ சத்யநாராயண பூஜை  
12-12-2016 ஞாயிறு மாலை 4-00 மணிக்கு 
பெரம்பூர் மீனாக்ஷி தெருவில் இருக்கும் 
ஸ்ரீ சங்கரா ஹாலில்
  நடைபெறும்..

அனைவரும் வருக !  
ஸ்ரீ சத்யநாராயணா வின் பேரருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

இவண் 
ஸ்ரீநாத் 
தலைவர் 

கல்யாணவரதன் 
செயலாளர் 

ராஜாராமன் 
பொருளாளர் 
ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி 





Tuesday, December 6, 2016


நாகப்பட்டினம் அருகில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான்."சரவண பவ" என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த  அவன் , அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான் . அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன் அச்சிலையின்  அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான்.இது போல இன்னொரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்
அந்த சிற்பி வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கை விரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான்.. அந்த ஊரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான் . அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து , முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது
மன்னன் அந்நேரத்தில் அங்கே வர அதை 'எட்டிப்பிடி' என உத்தரவுவிட்டான். காவலர்கள் அந்த மயிலைப்பிடித்து அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர்.அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் ' எட்டடிக்குடி'  என மாறி " எட்டுக்குடி" என்று அழைக்கப்படுகிறது
இதே சிற்பி மற்றொரு சிலையையும்  வடித்தான்.அதை என்கண் என்ற தளத்தில் வைத்தான்.சிற்பி 
முதலில்   வடித்த சிலை சிக்கலிலும் ,அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை . பிரகாரத்தில் முருகனுடன் பொறுக்குச்  சென்ற நவ வீரர்களின் சிலைகள் சிலைகள் உள்ளன .கூத்தாடும் கணபதி ,ஜுரதேவர் , சீனிவாச சவுந்தர்ராஜ பெருமாள் ,ஆஞ்சநேயர் அய்யப்பன் மஹாலட்சுமி நவகிரஹங்கள் , சனிபகவான் , பைரவர்   என பலர் உள்ளனர்.
எட்டுக்குடி சுப்ரமணிய ஸ்வாமியை குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும் , முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும் இவர் காட்சி தருவார்.சித்திரா பவுர்ணமியை ஒட்டி இங்கு விழா நடக்கிறது.கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைப்பட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும்.சிறப்புடையது.
சவுந்தரநாயகர் , ஆனந்தவல்லி தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள்பாலிக்கின்றனர் .
இத்தலங்கள் நாகப்பட்டினம் அருகில் உள்ளன . பேருந்து வசதிகள் உண்டு
நாகப்பட்டினம் - என்கண் = 32 கி மீ .  நாகப்பட்டினம் - எட்டுக்குடி = 31 கி மீ . நாகப்பட்டினம் -  சிக்கில் =4 கிமி 
சிக்கல் (பொருள்வைத்தசேரிபொரவச்சேரி முருகன் கோயில்,
எட்டுக்குடி முருகன் கோயில்,
என்கண் முருகன் கோவில்,
இந்த மூன்று கோயிலையும் ஒரே நாளில்
 நாம் தரிசனம் செய்தால்...
நாம் நினைத்தது கண்டிப்பாக நடக்கும் 
என்பது ஐதீகம்...
ENKANN
Poravacheri Sri Murugan





Thursday, December 1, 2016



                           
                                                     

தொண்டர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக  ஸ்ரீ தேவி வைகுண்டத்தை விட்டு நேராக பூலோகத்தில் தங்கால் மலை என்று அழைக்கப்பட்ட திருத்தாங்கலுக்கு வ ந்து கடுந்தவம் இயற்றினாள் .தேவியின் தவத்தை மெச்சும் பொருட்டு பெருமாள் அவள் முன் தோன்றி நற்சான்தழ் வழங்கினார். திருமகள் தங்கி தவம் புரிந்த தலம் ஆதலால் இப்பகுதி திருத்தங்கல் என்ற பெயர் உண்டானது.
இவ்வாலயத்தில் முதலில் காட்சி தரும் பெருமாள் பக்தர்களின் நிறை ,குறைகளை நிறுத்து அருள் பாலிப்பவன் என்பதை சங்கேதமாக உணர்த்துகிறது.
நயனங்களால் நன்மை கொழிக்க வைக்கும் தாயார் அருண கமல மஹாலக்ஷ்மியாக அதாவது செங்கமலத் தயாராக அற்புத தரிசனம் அருள்கிறாள்.
பெருமாளுக்கு திருத்தங்காலப்பன் என்று அழகு தமிழ் பெயர். திருமணம் , பிள்ளைப்பேறு என்று தம் குறைகளை தாயாரிடம் சமர்ப்பித்து விட்டு அவை நிறைவேறியதும் அதன் நன்றி காணிக்கையாக தாயாருக்கு ஒன்பது கஜ புடவை சாத்தி நெகிழ்கிறார்கள் பக்தர்கள்.
மூலக்கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் அழகாக காட்சி தருகிறார். அவருடன் வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாக ஸ்ரீதேவி , பூதேவி ,நீளா தேவியுடன் , ஜாம்பவதியையும் இங்கே தரிசிக்கலாம். 
ராமாவதாரத்தில் சீதை மீட்ப்புக்காக தனக்கு உதவியவர்களில் ஒருவனான ஜாம்பவானுக்கு நற்பேறு வழங்க விரும்பிய பெருமாள்  தன் கிருஷ்ணாவதாரத்தில் அவன் மகள் ஜாம்பவதியை மணம் புரிந்து கொண்டார். அந்த ஜாம்பவதியை இங்கே காணலாம். 
இவர்களுடன் பிருகு மகரிஷி,மார்க்கண்டேயர்,அருணன் ,கருடன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளார்கள். கோயிலின் மேல் தளத்தில் கருடன் வித்தியாச கோலம் காட்டுகிறார். நான்கு கரங்களுடன் , அமிர்த கலசம் தங்கியிருக்கிறார். சர்ப்பத்தை மாலையாக அணிந்து இருக்கிறார்.
உற்சவர் திருத்தங்கால் அப்பன் என்றழைக்கப்படுகிறார். ஆடிப்பூர விசேஷ நாளன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையையும், உடுத்தி க்களைந்த புடவையையும் எடுத்து வந்து இங்கே பெருமாளுக்கு சாத்தி மகிழ்கிறார்கள்.
தென்காசி - விருதுநகர் இரயில் மார்க்கத்தில் திருத்தண்கால் இரயில் நிலையத்திற்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது.
ஆலயம் சென்று வருவோம்.   பெருமாளை,தாயாரை சேவித்து வருவோம். 
நற்பேறு பெற்றிடுவோம்.