Sunday, October 8, 2017

08-10-2017 ஞாயிறு மாலை 4-00 மணி  பெரம்பூர் ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதியின் ஏழாவது ஆண்டு பூஜை துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பக்த கோடிகள் திரளாக வந்திருந்து கலந்து கொண்டு ஆதி முதற்கடவுளான ஸ்ரீ சத்ய நாராயணரை தொழுது பலனடைந்தார்கள்.
இன்று சிறப்பு நாளானபடியால் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு அழகிய plastic container நினைவு பரிசாக அளித்தார்கள். மேலும் குலுக்கல் முறையில் ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுத்து 5கிராம் வெள்ளி காசை பரிசளிக்கப்பட்டது . இரண்டாவது பரிசாக இருவர் தலா 3 கிராம் வெள்ளிக்காசு, மூன்றாம் பரிசாக மூவருக்கு தலா 2 கிராம் .வெள்ளிக்காசும் பரிசளிக்கப்பட்டது.மேலும் வந்திருந்த அனைவருக்கும்  "" ஸ்ரீ சத்யநாராயண விரத பூஜையும் கதையும் "" என்ற அழகிய புத்தகம் அளிக்கப்பட்டது. பூஜா விரத கதைகள் ஐந்தினை  மாருதி ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் கணீரென்ற குரலில் வாசித்தார். கதைகளை படித்து முடித்த பின் "" தன்னால் தரையில் சம்மன மிட்டு அமர முடியாதென்றும் ஆனால் ஸ்ரீ சத்யநாராயண பகவானை வேண்டிக்கொண்டே அமர முயற்சித்தேன் , அமர முடிந்தது. எவ்வித வலியுமின்றி தன்னால் மீண்டும்  பிறர் உதவியின்றி எழ முடிந்தது "" என்று வியந்து கூறினார். மாதாமாதம் பூஜை முடிவடைந்தபின்  பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற  பகவானை உள்ளமுருக வேண்டிக்கொள்கின்றனர். இதற்காக செயலாளர் ஸ்ரீ கல்யாணவரதன் மாமா சிறிது நேரம் அளிக்கிறார்.கண்களை திறந்து அவனைப்பார்த்து வேண்டிய வற்றை கேளுங்கள்.உங்களுக்கு வழங்க காத்திருக்கிறான் என்பார். பிரச்சினைகளை தீரப்பெற்றவர்கள் அடுத்த மாதம் வந்து கடவுளுக்கு பூ , பழம் , நெய் சர்க்கரை என்று நிவேதனப்பொருள்களை வழங்கி தங்கள் நன்றியினை சமர்ப்பிக்கிறார்கள்.ஆறு ஆண்டுகள் எந்தவித  சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து மாதாமாதம் பூஜை நடந்தேற உதவி புரிந்த சில முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. சிறந்த முறையில் இன்டர்நெட்டில் செய்திகளையும் , படங்களையும் வெளியிட்டு வரும் அடியேனையும் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்கள்.

பூஜை முடிவடைந்த பின் திருமதி .காயத்ரி ஸ்ரீ ராமன் மற்றும் செல்வி ஹரிணி யின் இன்னிசை பாமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. மிக நன்றாக பாடினார்கள். நல்ல குரல் வளம்.உச்சஸ்தாயி மிக லாவகமாக கையாண்டார்கள்.அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக பலர் ஆசி வழங்கினார்கள்.














No comments:

Post a Comment