Monday, January 16, 2017


முன்னோருக்கு நற்கதி அருளும் 

தஞ்சை மாவட்டம் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது  " திருப்புள்ளப் பூதங்குடி  " 'புள்' என்றால் பறவை. பறவை அரசனாகிய ஜடாயுவுக்கு மோட்சகதி அருளிய ராமன் அருள்பாலிக்கும் அற்புதமான திருத்தலம் இது.

மூலவர் ராமன் , சக்கரவர்த்தி திருமகனாக தெற்கில் தலை வைத்து யனத் திருக்கோலத்தில் அருள்புரிய, உற்சவர் வாழ்வில் ராமனாக நான்கு திருக்கரங்களோடு சேவை சாதிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.. வல்வில்  என்றால் வலிமையான வில்லை உடைய ராமன் என்று பொருள். " பொற்றாமரையாள்  " எனும் திரு நாமத்துடன்  பூமாதேவி இங்கு தாயாராக அருளுவது வெகு விசேஷம் என்கிறார்கள்.

சீதையைத் தேடி வந்த ராமன் குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவைக் காண்கிறார். சீதாவை ராவணன் கவர்ந்து சென்ற தகவலை ராமனிடம் சொல்லிவிட்டு , அவருடைய மடியிலேயே உயிர் விடுகிறார் ஜடாயு.. அவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய , மனைவியும் உடனிருத்தல் அவசியம். ராமன் சீதாதேவியை மனத்தால் நினைக்க ,பூமி பிராட்டியே இங்கே " ஹேமாம்புஜ வல்லி " (    பொற்றாமரையாள் ) தாயாராக எழுந்தருளியுள்ளாராம் .பிறகு அருகில் இருந்த புன்னை மரத்தடியில் அமர்ந்து சிரமப்பரிகாரம் செய்து கொண்டு சடங்குகளை முடித்து ஜடாயுவிற்கு முக்தி அளித்தார் ராமபிரான். இன்றைக்கும் மிகப் பழமையான புண்ணை மரத்தை இந்தக்கோயிலில் தரிசிக்கலாம். 

திருமங்கையாழ்வார் இவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது நான்கு கரங்களுடன் திகழும் ராமனை வேறு ஏதோ தெய்வம் என்று எண்ணி , கவனியாது சென்றாராம்.அப்போது பெரும் ஒளிவெள்ளத்துடன் ஆழ்வாருக்கு காட்சி தந்து தான் யார் என்று உணர்த்தினாராம் ஸ்ரீராமன் .
பரவசப்பட்ட திருமங்கையாழ்வார் " அறிய வேண்டியதை அறியாமல் சென்று விட்டேனே " என்று வருந்தி அதே பொருளில் " அறிவதறியான் அனைத்துலகும் உடையான்" என்று தொடங்கி பத்துப் பாடல்களை பாடியதாக தல  புராணம் உரைக்கிறது.
வைணவத் தங்களில் புதனுக்கு உரிய பரிகாரத் தலமாக அமைந்திருக்கும் இந்த தம் , ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தோர் பரிகாரம் செய்யவும் உகந்த இடம் என்கிறார்கள். முன்னோருக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஏதேனும் விடுப்பட்டுப் போயிருந்தால் அமாவாசை தினத்தில் இங்கு வந்து மஹா சங்கல்பம் செய்து முன்னோர் பிரார்த்தனையை நிறைவேற்றினால் முன்னோரின் ஆன்மா நற்கதி அடைய வாழ்வில் ராமன் அருள்புரிவார்.அதன் விளைவாக பித்ரு தோஷங்களும் , சாபங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
உற்சவர்  வைகுண்ட ஏகாதசி புறப்பாடு 
எல்லா கோவில்களிலும் ஸ்ரீராமர் நின்ற கோலத்திதான் சேவை சாதிப்பது வழக்கம். ஆனால் இந்தக் கோவிலில் ஸ்ரீராமர் சயன கோலத்தில் சேவை சாதிப்பது சிறப்பு.

Sunday, January 15, 2017



பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தில் கலந்துகொள்வதற்காக, தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேரை சத்தியலோகம் அழைத்தார். ‘சிதம்பரத்தில் இருந்தபடி நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் தான் எங்களுக்கு இன்பம். யாகத்தில் கலந்துகொள்வதால் எங்களுக்கு என்ன பயன்?’ என்று அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது நடராஜர் அந்தணர்களிடம், ‘நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள்.

யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றி உங்களுக்கு காட்சிதருவேன்என்று வாக்குறுதியளித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தைரத்னசபாபதிஎன்கின்றனர். ரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 மணி முதல் 11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.


உலக ஆதார நடனம் :

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் இந்த உலகம் இயங்குகிறது. கடலில் எப்போதும் ஓயாது அலையடித்துக் கொண்டே இருக்கிறது. நெருப்பு தன் ஜுவாலையான நாக்கை சுழற்றி எரிகிறது. காற்று தென்றலாய், புயலாய் வலம் வருகிறது. வானம் இடியாய், மின்னலாய், மழையாய் வர்ணஜாலம் காட்டுகிறது. பூமிப்பந்து தங்கு தடை இல்லாமல் சூரியனை வலம் வந்து இரவையும், பகலையும் உண்டாக்குகிறது.

இந்த இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது சிவபெருமானின் திருநடனம் தான். ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது. அவன் அசைவை நிறுத்தி விட்டால் சிறிய அணு கூட அசையும் சக்தியை இழந்து விடும். மனிதன் கருவில் இருக்கும் போதே தொடங்கும் இருதய இயக்கம், அதன் இயக்கத்தை நிறுத்தியதும் மனிதன் இறப்பதைப் போல, நடராஜர் தன் நடனத்தை நிறுத்தினால், உலகம் அழிந்து போகும்.

ஆண்டுக்கு ஆறு அபிஷேகம் :

தில்லை நடராஜப்பெருமானுக்கு, ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்யப்படுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

மாணிக்கவாசகருக்கு சிறப்பு :

திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர். திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல எழுதியவர், அந்தணர் வடிவத்தில் வந்த தில்லை நடராஜபெருமான் தான். திருவாசகத்தை எழுதி முடித்ததும், இறுதியில்மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியதுஎன்று திருவாசக ஏட்டில் கையெழுத்திட்டு, சிற்சபையின் பஞ்சாட்சரப் படியில் வைத்து விட்டு இறைவன் மறைந்து விட்டார். திருவாசக ஏட்டைக் கண்ட கோவில் அந்தணர்கள், மாணிக்கவாசகரை அழைத்து திருவாசகத்திற்கு விளக்கம் தருமாறு வேண்டினர். அவரும் தில்லை நடராஜரின் சன்னிதிக்கு வந்து, திருவாசகத்திற்கு பொருளுரைத்து, இறைவனுடன் கலந்தார்.

மாணிக்கவாசகருக்கு சிறப்பு செய்யும் விதத்தில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி திருவாதிரை விழா நடக்கிறது. பத்துநாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் மாணிக்கவாசகர், சுவாமி சன்னிதிக்கு எழுந்தருள்வார். அப்போது திருவாசகம் பாடப்படும். குறிப்பாக திருவெம்பாவைப் பாடல்களைப் பாடுவர். அதன்பின் மாணிக்கவாசகருக்கும், சுவாமிக்கும் தீபாரதனை நடக்கும்


Thanks: Tamil the Hindu

Friday, January 13, 2017

Monday, January 9, 2017

2017 ஜனவரி மாத
 ஸ்ரீ சத்யநாராயண பூஜை 

இம்மாத பூஜை 08-01-2017 அன்று மாலை 4-00 மணி அளவில்
ஸ்ரீ சங்கராலயத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானின் அருள் ஆசி பெற்றனர். 
மழையின்றி வாடும் உலகிற்காக வருண ஜபம் கல்யாணவரதன் மாமா அவர்களால் முன் பொழியப்பட்டு கூட்டத்தினர் உளமுருக மழை வேண்டி பிரார்த்தித்து அதை வழி மொழிந்தனர் .கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே போல் மழை வேண்டி ஸ்ரீ சத்யநாராயண பூஜையின்போது பிரார்த்தித்த பின் ஓரிரு நாட்களில் நல்ல மழையினை பெரம்பூர் கண்டு அனுபவித்தது. பகவான் அருளால் இவ்வாண்டும் அங்ஙனமே ஆக பிரார்த்திப்போம்.

பூஜை பிரசாதம் வழங்க , பிரசாத மளிகை சாமான்களான கோதுமை ரவை, சர்க்கரை ,நெய் , தேங்காய், பூ போன்றவற்றை 
நன்கொடையாக வரவேற்கப்படுகிறது.
பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம்.
அடுத்த ( பிப்ரவரி )மாத பூஜை 14-02-2017 அன்று சிறப்பாக நடைபெறும். அனைவரும் வருக ! அருளாசி பெறுக!!
தலைவர் & தன்னார்வலர்கள்  

Saturday, January 7, 2017

அன்புடையீர் 
நமஸ்காரம்/ ஆசிர்வாதம் 
2 0 1 7 
புத்தாண்டு 

முதல் மாத பூஜை 
ஜனவரி மாத 
ஸ்ரீ சத்யநாராயண பூஜை  
08-01-2017 ஞாயிறு மாலை 4-00 மணிக்கு 
பெரம்பூர் மீனாக்ஷி தெருவில் இருக்கும் 
ஸ்ரீ சங்கரா ஹாலில்
  நடைபெறும்..

அனைவரும் வருக !  
ஸ்ரீ சத்யநாராயணா வின் பேரருளைப் பெற 
அன்புடன் 
அழைக்கிறோம்.

இவண் 
ஸ்ரீநாத் 
தலைவர் 

கல்யாணவரதன் 
செயலாளர் 

ராஜாராமன் 
பொருளாளர் 
ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி 

குறிப்பு.

பூஜை ,அது சம்பந்தப்பட்ட 
 செயல்பாடுகள் 
மாதா மாதம் 
சிறப்பாக நடைபெற
 பணம் , பொருள்கள் 
அன்பளிப்பாக 
அளிக்க விரும்புவோர் 
செயலர் 
அல்லது 
பொருளாளரை அணுகவும்.