50/23 Paddy Field Road,
Perambur, Chennai-600 011
President: S.V. Srinath, 93825 17424,
Secretary: K.V. KalyanaVaradhan, 94444 52687,
Treasurer: S.Rajaraman, 044-2551 9804.
e-mail : srisnpooja@gmail.com WEB Master N.MOHAN, 80560 66995
Thursday, December 28, 2017
Thursday, December 21, 2017
Thursday, December 7, 2017
அன்புள்ள பக்தகோடிகளுக்கு ,
டிசம்பர் மாத ஸ்ரீ சத்யநாராயணா பூஜை
10-12-2017 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4-01 மணிக்கு
மீனாக்ஷி தெரு, பெரம்பூர்
ஸ்ரீ சங்கராலயத்தில்
சிறப்பாக நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு
கண்கண்ட தெய்வமாம்
ஸ்ரீ சத்யநாராயணனின்
அருளுக்கு பாத்திரதாரர்கள் ஆகும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
பூஜை சாமான்களுக்காகவும் பிரசாதம்
மற்ற செலவுகளுக்காகவும்
நன்கொடைகள்
வரவேற்கப்படுகின்றன.
நன்கொடைகளை பணம், காசோலை,
பூ , பழம், நெய்,சர்க்கரை
போன்ற கைங்கர்ய பொருட்களாகவும்
மற்ற பூஜை பொருட்களாகவும் வழங்கலாம்.
விபரங்களுக்கு
தலைவர்/செயலர்/பொருளாளரை
கலந்தாலோசிக்கவும்.
அனைவரையும் வருக வருக என
வரவேற்கிறோம்.
இங்கனம்
தலைவர்,செயலர் மற்றும் நிர்வாகிகள்
ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி
பெரம்பூர்
94444 52687,
Monday, November 13, 2017
நவம்பர் மாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை வழக்கம்போல இரண்டாவது ஞாயிறு (12-11-2017) மாலை 4-00 மணிக்கு மிக விமரிசையாக நடைபெற்றது. கன மழை பெய்து சென்னை நகரை புரட்டி எடுக்கும் என்று எல்லா மீடியாக்களும் பயமுறுத்திய போதும் ஏராளமான பக்த பெருமக்கள் குறிப்பாக மகளிர் பூஜையில் கலந்து கொண்டு ஆதி பகவான் ஸ்ரீ சத்தியநாராயணன் அருள் பெற்று சென்றனர்.
பூஜையை திரு கல்யாண வரதன் மாமா மிகுந்த அனுஷ்டானங்களுடன் செய்தார். பூஜையின் முடிவில் பக்தர்கள் மனமுருகி பகவானிடம் வேண்டிக்கொள்ள , தங்கள் குறை,நிறைகளை கூறி மங்களம் வேண்டிக்கொள்ள அவகாசம் அளித்தார்.
திரு.மாருதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ஸ்ரீ சத்யநாராயண வரலாறு கதைகள் படிக்க மஹா தீபாராதனையுடன் பூஜை நிறைவு பெற்றது. பக்தர்கள் எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
டிசம்பர் மாத பூஜை 10-12-2017 ஞாயிறு அன்று நடைபெறும். அனைவரும் வருக அவனருள் பெறுக.
Thursday, November 9, 2017
அன்புள்ள பக்தகோடிகளுக்கு ,
நவம்பர் மாத ஸ்ரீ சத்யநாராயணா பூஜை
12-11-2017 ஞாயிற்றுக்கிழமை
மாலை 4-00 மணிக்கு
மீனாக்ஷி தெரு, பெரம்பூர்
ஸ்ரீ சங்கராலயத்தில்
சிறப்பாக நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு
கண்கண்ட தெய்வமாம்
ஸ்ரீ சத்யநாராயணனின்
அருளுக்கு பாத்திரதாரர்கள் ஆகும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
பூஜை சாமான்களுக்காகவும் பிரசாதம்
மற்ற செலவுகளுக்காகவும்
நன்கொடைகள்
வரவேற்கப்படுகின்றன.
நன்கொடைகளை பணம், காசோலை,
பூ , பழம், நெய்,சர்க்கரை
போன்ற கைங்கர்ய பொருட்களாகவும்
மற்ற பூஜை பொருட்களாகவும் வழங்கலாம்.
விபரங்களுக்கு
தலைவர்/செயலர்/பொருளாளரை
கலந்தாலோசிக்கவும்.
அனைவரையும் வருக வருக என
வரவேற்கிறோம்.
இங்கனம்
தலைவர்,செயலர் மற்றும் நிர்வாகிகள்
ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி
பெரம்பூர்
94444 52687,
Sunday, October 8, 2017
08-10-2017 ஞாயிறு மாலை 4-00 மணி பெரம்பூர் ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதியின் ஏழாவது ஆண்டு பூஜை துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பக்த கோடிகள் திரளாக வந்திருந்து கலந்து கொண்டு ஆதி முதற்கடவுளான ஸ்ரீ சத்ய நாராயணரை தொழுது பலனடைந்தார்கள்.
இன்று சிறப்பு நாளானபடியால் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு அழகிய plastic container நினைவு பரிசாக அளித்தார்கள். மேலும் குலுக்கல் முறையில் ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுத்து 5கிராம் வெள்ளி காசை பரிசளிக்கப்பட்டது . இரண்டாவது பரிசாக இருவர் தலா 3 கிராம் வெள்ளிக்காசு, மூன்றாம் பரிசாக மூவருக்கு தலா 2 கிராம் .வெள்ளிக்காசும் பரிசளிக்கப்பட்டது.மேலும் வந்திருந்த அனைவருக்கும் "" ஸ்ரீ சத்யநாராயண விரத பூஜையும் கதையும் "" என்ற அழகிய புத்தகம் அளிக்கப்பட்டது. பூஜா விரத கதைகள் ஐந்தினை மாருதி ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் கணீரென்ற குரலில் வாசித்தார். கதைகளை படித்து முடித்த பின் "" தன்னால் தரையில் சம்மன மிட்டு அமர முடியாதென்றும் ஆனால் ஸ்ரீ சத்யநாராயண பகவானை வேண்டிக்கொண்டே அமர முயற்சித்தேன் , அமர முடிந்தது. எவ்வித வலியுமின்றி தன்னால் மீண்டும் பிறர் உதவியின்றி எழ முடிந்தது "" என்று வியந்து கூறினார். மாதாமாதம் பூஜை முடிவடைந்தபின் பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற பகவானை உள்ளமுருக வேண்டிக்கொள்கின்றனர். இதற்காக செயலாளர் ஸ்ரீ கல்யாணவரதன் மாமா சிறிது நேரம் அளிக்கிறார்.கண்களை திறந்து அவனைப்பார்த்து வேண்டிய வற்றை கேளுங்கள்.உங்களுக்கு வழங்க காத்திருக்கிறான் என்பார். பிரச்சினைகளை தீரப்பெற்றவர்கள் அடுத்த மாதம் வந்து கடவுளுக்கு பூ , பழம் , நெய் சர்க்கரை என்று நிவேதனப்பொருள்களை வழங்கி தங்கள் நன்றியினை சமர்ப்பிக்கிறார்கள்.ஆறு ஆண்டுகள் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து மாதாமாதம் பூஜை நடந்தேற உதவி புரிந்த சில முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. சிறந்த முறையில் இன்டர்நெட்டில் செய்திகளையும் , படங்களையும் வெளியிட்டு வரும் அடியேனையும் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்கள்.
பூஜை முடிவடைந்த பின் திருமதி .காயத்ரி ஸ்ரீ ராமன் மற்றும் செல்வி ஹரிணி யின் இன்னிசை பாமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. மிக நன்றாக பாடினார்கள். நல்ல குரல் வளம்.உச்சஸ்தாயி மிக லாவகமாக கையாண்டார்கள்.அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக பலர் ஆசி வழங்கினார்கள்.

Friday, October 6, 2017
ஸ்ரீ சத்யநாராயண சேவா சமிதி பெரம்பூரில் துவக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீ சத்யநாராயண பூஜை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது .இந்த இமாலய வெற்றிக்கு தோளோடு தோள் சேர்த்து கைங்கர்யத்தில் ஈடுபட்டுவரும் சமிதியின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீநாத் , செயலாளர் ஸ்ரீ கல்யாணவரதன் , பொருளாளர் ஸ்ரீ ராஜாராமன் முறையே த்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் அத்வைதம் பிரிவுகளை சார்ந்தவர்கள் .
மாத பூஜையில் கலந்து உளமுருக வேண்டி பிரார்த்தித்து அதன் பலனை அடைந்தவர்கள் பலர் உண்டு. கண்கண்ட தெய்வமாம் ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் நீங்களும் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகளை பகவானிடம் சமர்ப்பியுங்கள் .பலன் உங்களை தேடிவருவதை உணருவீர்கள் .
இம்மாத ஸ்ரீ சத்யநாராயண பூஜை ஏழாவது ஆண்டு துவக்க சிறப்பு பூஜையாக 08-10-2017 மாலை 4-00 மணிக்கு பெரம்பூர் மீனாக்ஷி தெரு 3-ம் எண்ணில் உள்ள ஸ்ரீ சங்கராலயத்தில் நடத்தப்பட உள்ளது.
அனைவரும் வருக, பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு பாக்கியதாரர் ஆகும்படி கேட்டுக்கொள்கிறோம் .
ஏழாம் ஆண்டு துவக்க விழாவினை சிறப்பாக கொண்டாடும் விதமாக சத்ய நாராயணா பூஜை முடிவடைந்ததும் ஒரு இன்னிசை பக்தி பாமாலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்.
திருமதி.காயத்ரீ ஸ்ரீராம் மற்றும் செல்வி G ஹரிணி அவர்களும் இன்னிசை பக்தி பாமாலை வழங்க உள்ளார்கள்.
இன்னிசை தேன்துளிகளை அள்ளிப்பருக அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

Sunday, August 13, 2017
இம்மாத பூஜையை திருமதி &திரு வசந்தா ,லக்ஷ்மணன் செய்தார்கள். திருமதி வசந்தா அவர்கள் 2 மாஸ்டர் டிகிரி பெற்று மாதவரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி நல்லாசிரியர் பரிசு தமிழக அரசினால் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார் என்றார் .பூஜையின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சில உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Smt Vasanthi and Sri.Lakshmanan |
Subscribe to:
Posts (Atom)