50/23 Paddy Field Road,
Perambur, Chennai-600 011
President: S.V. Srinath, 93825 17424,
Secretary: K.V. KalyanaVaradhan, 94444 52687,
Treasurer: S.Rajaraman, 044-2551 9804.
e-mail : srisnpooja@gmail.com WEB Master N.MOHAN, 80560 66995
Thursday, September 15, 2016
இன்று (15-09-16 ) காலை 0900 மணிக்கு ஸ்ரீ அனந்த விரத பூஜை பெரம்பூர் ஸ்ரீ சங்கராலயத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. அதன் செயலாளர் ஸ்ரீ கல்யாண வரத்தன் அனுஷ்டான முறைப்படி செய்து வைத்தார். இப்பூஜையின் அங்கமாக சமஷ்டியாக ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டார்கள். பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் நைவேத்ய பிரசாதங்கள் வழங்கப்பட்டன பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
Smt. Pushpa and Secretary Kalyana Varadhan |
Smt.Alamelu and Sri Radhakrishnan Ayyanavaram |
Tuesday, September 13, 2016
Monday, September 12, 2016
பக்த கோடிகளுக்கு நமஸ்காரம்.
11-09-2016 அன்று நடைபெற்ற ஸ்ரீ சத்யநாராயணா பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள் .
பூஜையின் போது நடைபெற்ற காட்சிகளை படம் பிடித்து உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
தீப ஹாரத்தியில் ஸ்ரீ ஹனுமார் சஞ்சிவி மலையினை பெயர்த்துக்கொண்டு வானில் பறப்பதைப் போன்ற பிம்பத்தைக்காணலாம் . இது ஒரு அறிய அதிசய நிகழ்வாகும்.
அடுத்த மாத ஸ்ரீ சத்யநாராயணா பூஜை , நவராத்ரி பூஜை காரணமாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை (16-10-2016) அன்று நடைபெறும். நமது சமிதி துவங்கி ஐந்து ஆண்டுகள் முடிந்து ஆறாவது ஆண்டு துவங்குவதால் மிக சிறப்பாக கொண்டாடப்படும். சிறப்பு பூஜை பற்றிய விபரங்கள் அடுத்து வரும் செய்திகளில் வெளியாகும்.
ஸ்ரீ சத்தியநாராயணன் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
அநேக நமஸ்காரம்.
அடியேன் தாசன்
கல்யாண வரதன்.
ஸ்ரீ சத்யநாராயணா சேவா சமிதி செயலாளர்
பெரம்பூர்
09444452687
Sri Sankaralayam, Persmbur. |
Plucking Thulasi Leaves for Archanai |
Secretary reciting slakhas |
Pooja |
Telling Stories |
Packing up Prasadams |
In Deepa Haraththi it look like Hanuman flies with sanjeevi malai |
Devotees seeing Deepa Haraththi |
President Secretary Treasurer |
Saturday, September 10, 2016
11-09-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 0400 மணியளவில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை பெரம்பூர்நெ3 மீனாக்ஷி தெருவில் இருக்கும் சங்கராலயத்தில் நடைபெற இருக்கிறது. தாங்கள் குடும்ப சமேதராக வந்து பூஜையில் கலந்து கொண்டு திருவருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
நமது சமிதியில் ஸ்ரீ சத்யநாராயண பூஜை கிரமம்.
கணபதி பூஜை , நவகிரஹ பூஜை, அஷ்டதிக் பூஜை, வருண பூஜை, விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய நாராயண அஷ்டோத்ரம், லக்ஷ்மி அஷ்டோத்ரம் , சிவ அஷ்டோத்ரம், மற்றும் லலிதா திருசதி அர்ச்சனைகள், கலஸ ஆவாஹனம் மற்றும் தென்னக சத்யநாராயணா பிம்பம் மற்றும் அன்னாவரம் ஸ்ரீ சத்ய நாராயண சுவாமி பிம்பத்திலும் அர்ச்சனைகள் உபயத்தாரர்கள் மூலமாக செய்யப்படுகின்றன .
பிரதி மாதம் சுமார் 150 சேவார்த்திகள் பூஜையில் கலந்து கொள்கின்றனர்
அர்ச்சனைகள் முடிந்தவுடன் தூப தீப நெய்வேத்யம் கற்பூர ஆரத்திக்குப் பிறகு சேவார்த்திகள் அனைவரும் புஷ்பங்களுடன் மந்திர புஷ்பம் ஜபித்து சுவாமியிடம் சமர்ப்பித்து தங்கள் கோரிக்கைகள் ,வேண்டுதல்கள் நிறைவேற பக்தியுடன் பிரார்த்திக் கொள்கின்றனர் .
பிரார்த்தனைகள் நிறைவேறிய சேவார்த்திகள் தங்கள் அனுபவங்களை சமிதியிடமும் மற்ற சேவார்த்திகளுடனும் நெஞ்சு நிறை நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றனர்
லக்ஷ்மீபதே கமலநாப சுரேஷ விஷ்ணு
வைகுண்ட கிருஷ்ண மதுசூதன புஷ்காரக்ஷ
பிரம்மண்ய கேசவ ஜனார்த்தன வாசுதேவா
தேவேச தேஹி மமதேஹி கிருபணஸ்ய
கராவலம்பம் .
உலகமனைத்தையும் அணைத்துக் காப்பாற்றும் தங்கள் கருணைத் திருக்கரங்களை என்பால் நீட்ட பிரார்த்திக்கிறேன் .
தினசரி இந்த ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் உச்சரித்து வந்தால் ஸ்ரீமன் நாராயணன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
Subscribe to:
Posts (Atom)